பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

நெருப்புத் தடயங்கள்

“சொல்லு, பொன்மணியை இன்னும் வச்சுருக்கியா, இல்ல யார்கிட்டேயும் வித்துட்டியா?”

வினை தீர்த்தான், தமிழரசியை நேருக்கு நேராய் பார்க்கப் போனான். -முடியவில்லை. அவள் ஏன் தன் கண்களுக்குக் கோடு கோடாய் தெரிகிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. கண்களில் ஏன் அவள் கரைந்து போகிறாள் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. பார்த்தவனின் கண்களை மறைத்த நீர், பார்க்கப்பட்டவளை கோடு கோடாக்கி, கேடு கேடாக்கி விட்டது. புரியாமலே, அவன் தலை கால் புரியாமல் ஓடினான். அவளைத் திரும்பிப் பார்க்காமலே, தென்புறமாக ஓடினான்.

குழம்பிப்போன தமிழரசி குமைந்தாள். ஏன் ஓடுகிறான்? ஒரு வேளை பொன்மணியை நான் சொன்னது மாதிரியே, அய்யோ ...

தமிழரசி, வினை தீர்த்தான் போன திசையைப் பார்த்து ஓடினாள். வெட்டவெளிக்குள் வந்தவள், அவன் எந்தப் பக்கமும் இல்லாதது கண்டு திகைத்தாள். இதற்குள் அவன் ஓடி முடித்து, அந்த நிலப்பரப்பைக் கடந்திருக்க முடியாதே என்று நாலா பக்கமும் திரும்பியபோது, பஸ் நிலையத்தின் புறமுதுகுப் பகுதியைப் பார்த்தாள்.

வினை தீர்த்தான், கூனிக் குறுகி, குழந்தை போல் ஏங்கி ஏங்கி, அழுது கொண்டிருந்தான். தலையை அவ்வப் போது அடித்துக் கொண்டான், தமிழரசி தாயானாள். படபடப்போடும், பரபரப்போடும் ஓடிப்போய் நின்றாள். அப்படியும் ஆவேசம் தணியாமல், “பொன்மணியை எங்கே?” என்றாள். வினை தீர்த்தான் அவளை ஏறிட்டு நோக்கினான். பிறகு “என்கிட்டேயே நல்லாத்தான் இருக்காள்” என்றான். அவனே பேசட்டும் என்பது போல் தமிழரசி பேசாது நின்றாள். இரண்டு நிமிட மவுனத்தில் கண்ணீரைக் கரைத்த வினை தீர்த்தான், அவளைப் பார்க்-