பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

199


காமலே பஸ் நிலைய தூணைப் பார்த்தபடியே கேவிக் கேவிப் பேசினான்.

“ஒன் காலுல கிடக்கிற செருப்பைக் கழட்டி என்னை நீ அடித்தாலும் தகும். அவ்வளவு பெரிய பாவத்த செய்துட்டேன். நான் அயோக்கியன்தான். அற்பன்தான். நான் செய்தது நம்பிக்கை துரோகந்தான். இவ்வளவையும் தெரிஞ்சுகிட்டுத்தான் செய்தேன். ஆனால் ஒண்ணு; நான் மனுஷன் என்கிறதாலதான் செய்தேன். என் அப்பாவும், தங்கச்சியும், எல்லாருக்கும் மேலே... என்னோட தமிழும் துடிச்சுப் போவாங்கன்னு தெரிஞ்சுதான் செய்திட்டேன், நீ இனிமேல் என்ன பண்ணனுமின்னாலும் பண்ணு. அதுக்கு முன்னால ஒரே ஒரு பிச்சைக் கேக்கேன். அப்பாவும், தங்கச்சியும் ஊர்ல எப்டி இருக்காங்கன்னு கூட சொல்லாண்டாம். நீ நாசமாய் போயிட்டதாய் சொன்னியே, அதையாவது என்கிட்ட சொல்லு. ஒனக்கு ஒண்ணுன்னா, அது எனக்கும், பொன்மணிக்கும், அப்பாவுக்கும், கலாவதிக்கும், ரெட்டிப்பாயும் மொத்தமாயும் வந்ததாய் அர்த்தம். தமிழு, என் கூடப் பிறவா தங்கச்சியே! என் பத்தரைமாத்துத் தங்கமே! சொந்த அண்ணனைவிட இந்த அண்ணனை தலையில வச்சு கூத்தாடுன என் தமிழு! சொல்லும்மா. ஒன்கிட்ட, தாமு மச்சான் பேசலியா? அண்ணன்னு நினைச்சால், பேச்சு வராது. இப்போ என்னை அக்காள்னு நினைச்சு சொல்லும்மா.”

வினைதீர்த்தான், மீண்டும் ஏங்கி ஏங்கி அழுதான், தமிழரசியும், தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். இரு துருவ உணர்வுகளுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேர இடைவெளியில் வினை தீர்த்தான் துண்டாலும், தமிழரசி முந்தானையாலும் துடைத்துக் கொண்டார்கள். இதற்குள் பஸ் ஹாரன் சத்த அலைகளுக்கிடையே, அங்கிங்குமாய் ஓடிக் களைத்த அறைத் தோழி, அவர்கள் பக்கம் ஓடிவந்து மூச்சு விட்டாள். வினை தீர்த்-