பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

நெருப்புத் தடயங்கள்

 ஆனால், ஒனக்கும் எனக்கும் சம்பந்தமில்லன்னு மட்டும் சொல்லாத தமிழு. என்னால தாங்க முடியாது. நான் ஊருக்கு முரடன்; ஆனால் ஒனக்கு, ஒன் காலுல கிடக்கிற செருப்பு மாதிரி.

‘இவ்வளவு பேசுறியே, ஊர்ல அப்பா தங்கச்சி எப்படி இருக்காங்கன்னு ஒரு வார்த்தை கேட்டியா?”

“அதை கேக்குறதுக்கு எனக்கு எங்கே தமிழு யோக்கியதை இருக்கு? அதோட அவங்களுக்கு ஒண்ணுன்னால், நீ எங்க இருந்தாலும் ஆண்டவன் ஒன் உடம்பை துடிக்க வச்சுட மாட்டாரா...? பிச்சாண்டியை நேற்று பஸ்ல பார்த்தேன். அடுத்த வாரம் அம்மங்கொடைக்கு ஊருக்குப் போறானாம். நாங்க இங்கே சுகமாய் இருந்ததை ஊர்ல சொல்லுவான். அப்பாவும், தங்கச்சியும் சந்தோஷப் படாமலா போவாங்க?’’

“இவரு ஒருத்தரு சாப்பிட விடமாட்டாரு. சாப்பிடுங்க அண்ணி.’’

பொன்மணி மசால் தோசையைப் பிய்த்து தமிழரசி வாயில் ஊட்டினாள். அந்த அன்பின் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டவளாய் தமிழரசி வாயைத் திறந்தாள். வினை தீர்த்தான் தலையைச் சொறிந்தபடியே நின்றான், பொன்மணி, மசால் தோசையோடு மசாலாவாக, ஒரு கோரிக்கையைப் போட்டாள்.

  • எத்தனை நாளைக்கு அண்ணி இப்படி கழுத்துல ஒண்ணு மில்லாமல் இருக்கது? தாலி கட்டணுமுன்னால் தமிழு வந்து தான் கட்டணுமுன்னு சொல்லிட்டார். நீங்க லீவ் முடிஞ்சு மெட்ராஸ் வாரது வரைக்கும் சும்மா இருப்போ முன்னாரு. இவர் வேலை பார்க்கிற லாரி ஷெட் ஒனர், சிக்கிரமாய் பஞ்சாயத்தார் முன்னால கல்யாணத்தை செய்துக்கங்க. நான் சப்ரிஜிஸ்டிராரை கூட்டிவாரேன். இல்லன்னா, ஓங்க ஊர்ல யாரும் கம்ப்ளெயின்ட் கொடுத்திருந்தால், ஒங்களை எப்போ வேணுமுன்னலும் போலீஸ் பிடிச்சுட்டுப் போகலா