பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

207


முன்னு சொல்றார். எனக்குப் பயமாய் இருக்கு. இந்த ஊருக்கு வந்து ஒரு மாசமாகுது. கோவிலுல கல்யாணம் செய்து, பஞ்சாயத்தார் சப்ரிஜிஸ்டிரார் முன்னால ரிஜிஸ்டர்ல கையெழுத்துப் போட்டுட்ட்டால், சட்டப் படியான கல்யாணமாம். நாளைக்கு நல்ல நாள் அண்ணி. நீங்களே முன்னால நின்னு நடத்தி வச்சுடுங்க அண்ணி, பிளிஸ்: ‘

தமிழரசி திடுக்கிட்டாள். இதுவரை, இவர்கள் காதலில் தலையிடாத கம்பீரத்தோட நிற்கேன், கல்யாணத்தை நடத்தி வச்சால், ஊர்ல என்ன நினைப்பாங்க? தாமு என்ன நினைப்பார்? அதோட இந்த பிளஸ்டு’ பொன்மணியால படிப்பில மைனஸான இவனோடு தொடர்ந்து வாழ முடியுமா? இப்படிப்பட்ட பெண்கள், அப்புறம் சிதைஞ்சு போனதை பார்த்திருக்கேனே. வினைதிர்த்தான் கிட்ட பக்குவமாய் பேசி, சினிமாவுல வாரது மாதிரி, பொன்மணியை வெறுக்கது மாதிரி அவனை நடிக்கச் சொல்லி, அப்புறம் பொன்மணியை தாமு கிட்ட ஒப்படைச்சுடலாமா? எப்டி முடியும்? ஏன் முடியாது? இந்தக் காலத்துல எத்தனையோ குடும்பத்துல பிற ஆண்களோட டுர்’ போன இளம் பெண்கள். அப்புறம் மற்றவங்களை கல்யாணம் செய்து, கண்ணகி மாதிரி பார்க்கிறதை பார்த்திருக்கேனே.

20

ஒரு சில நாட்கள், ஊரார் ஒட்டுமொத்தமாக அழுத போது அந்த அழுகையை, கோபமாக மாறு முன்பே பயமாக மாற்றிக் காட்டிய சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன், வினாடி விடனாடியாய், அணு அணுவாய், நினைவு நினவாய், கனவு கனவாய், உணர்வு உணர்வாய் அழத் துவங்கினான். அன்றும், காவல் நிலையத்தில், தனித்திருந்த