பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

நெருப்புத் தடயங்கள்

 அறையில், உள்ளுற அழுது கொண்டுதான் இருந்தான். அதேஅறை. அதே ஏட்டு பொன்னுச்சாமி. அதே ரைட்டர் சபாஸ்டின். அதே போலீஸ்காரர்கள். ஆனாலும் ஒரே ஒரு கூடிய மாற்றம்.

எஸ்டேட் முதலாளி பூமிநாதன், புதிதாய் முளைத்திருந்தார். சினிமாவில் எஸ்டேட் ஆதிக்க இளைஞர்கள் வருவது போல, இந்த ஐம்பத்தைந்து வயது முதலாளியும், டவுசரும், டி சட்டையும் போட்டு, கையில் ஒரு பேட் மிட்டனோ, குட்மிட்டனோ.அதற்கான வலைக் கம்பை கையில் பிடித்தபடி, தாமோதரனுக்கு எதிர் நாற்காலியில், இரண்டு கால்களையும் தூக்கிப் போட்டுக் கொண்டு, என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தார்.

தாமோதரனுக்கு, அவரைப் போலவே, அவரது பேச்சும் புரியவில்லை. இவ்வளவுக்கும், அவர் போட்ட சத்தத்தில், சாலையில் போன ஒரு நாய்கூட வாலை வளைத்து, காதுகளை நிமிர்த்தி திரும்பிப் பார்த்தது. என்றாலும், தாமுவுக்கு அவரின் ஒலிதான் கேட்டதே தவிர, அதில் உள்ளடங்கிய வார்த்தைகள் கேட்கவில்லை. ஆனாலும் ஒப்புக்கு, அவ்வப்போது தலையை ஆட்டிக் கொண்டான். அவர் இடையிடையே சிரிக்கும் போது, இவனும் அரை குறையாய் சிரித்துக் கொண்டான். அவனது கேட்பு ஞானம் மட்டுமல்ல; பார்வை ஞானமும் பாதிக்கப்பட்டிருந்தது.

எதிரில் பூமிநாதன் மட்டும் அவனுக்குத் தோன்ற வில்லை. அவர் வாய்க்குள், மாடக்கண்ணு விழுந்த கிணற்றைப் பார்த்தான். அவர், லைட்டரை வைத்து சிகரெட்டைப் பற்றவைத்த போது, அந்த நெருப்பில், கலாவதி சூடுபட்ட காட்சியைப் பார்த்தான். பயந்து போன தாமு, தலையைத் தூக்கி மின் விசிறியைப் பார்த்தான். அது மின் விசிறியல்ல. பூமியின் பேய் வாயான கிணற்றுக்குள் வீழ்த்தப்பட்ட மாடக்கண்ணு மாமா