பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 1 0

நெருப்புத் தடயங்கள்


தனிமை, தனிமையேதான். இது தெரியாமல், அவனை இருப்பிடத்தில் காலை ஒன்பது மணிக்கே பிடித்துக்கொண்ட இந்த பூமிநாதன், அவனை அதே படகுக்காரில் ஏற்றிக் கொண்டு இங்கே வந்து விட்டார். அவனுள் இருந்த பழைய தாமோதரன் காரில் ஏறத் தயங்கினான். ஆனால் ‘புதுமை தாமோதரன் புறப்பட்டான்.

நேர்மை என்பது கற்பு மாதிரி. கற்பழிக்கப்பட்ட பிறகு முத்தமிட்டது பெரிய குற்றமா? அதற்காக இந்த மனிதர் இப்படியா அறுப்பது? பெரிய யோக்கியர் போல நாடே குட்டிச்சுவராயிட்டு என்கிறார். நல்லவன், கெட்டவன் கைல சிக்கியிருப்பதால் அவரே சொல்லிக் கொள்கிறார். அதற்கு விளக்கமும் கொடுக்கிறார். தப்புச் செய்கிறவனை எல்லாம், சவூதி அரேபியாவுல மாதிரி, ஒரு கை, ஒரு காலை எடுத்திடணும் என்கிறார். அப்படியானால் தனக்கு இன்னும் எத்தனையோ உறுப்புக்கள் தப்புக்கு தண்டனையாக தேவை என்பது தெரியாமலே...

பூமிநாதனும் இறுதியில் பூமிக்கு வந்து விட்டார்.

“அப்புறம் எஸ்டேட் பசங்க இங்க வந்தாங்களா சார்?'’

தாமோதரன், அவர் கேள்வி புரியாமல், அரை குறையாய் சிரிப்பதுபோல் பாவலா செய்தான். அந்தக் குறை பிரசவ புன்னகையை “நான் இருக்கேன், பார்த்துக்கிறேன்’ என்று அவன் சொல்வதாக, பூமிநாதன் பொருட்படுத்திக் கொண்டார். பிறகு தான் அந்த எஸ்டேட்டை, எப்படியெல்லாம் உருவாக்கி, எப்படியெல்லாம் முன்னுக்குக் கொண்டு வந்த புராணத்தை, தொடுத்துக் கொண்டிருந்தார். தாமு அவ்வப்போது தலையை ஆட்டி, அவர் பாட்டுக்கு தப்பாத தாளமாகிக் கொண்டிருந்தான். ஆனாலும் அவர் லூட்டியை அவனால் தாள முடியவில்லை. நரை முடியில் மை தொங்க, கழுத்தில் பணம் கட்டிய தாலி போன்ற மைனர் செயின் தொங்க, மேலுதட்டின் மேலே டிரிம் செய்யப்பட்ட மீசை மின்ன, அட்டகாசப்