பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

நெருப்புத் தடயங்கள்


“ஒ அதுவா? மாடக்கண்ணுவ கிணத்துல விட்டாங்க; கலாவதியை சூட்ல விட்டாங்க, என்னை எங்கேயோ விட்டாங்க...’ -

பூமிநாதன், அதிர்ந்து போய் அவனைப் பார்த்தார். உற்றுப் பார்த்தார். அவனை, அவர் பார்ப்பதைப் பார்க்காமல், தனக்குள்ளையே தன்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அடப் பாவி, எஸ்டேட் பசங்க இன்னிக்கு ஸ்டேஷனுக்கு வந்து நியாயம் கேட்கப் போறாங்களாம். அதைச் சொல்றதுக்காக வந்தேன். அதுக்குள்ளே இவன் இப்படி ஆயிட்டானே. -

பூமிநாதன். அங்கிருந்தபடியே, ‘பொன்னுச்சாமி! பொன்னுச்சாமி!” என்று ஏலம் போட்டார். எஸ். பி. மாதிரி அதட்டிக் கூப்பிட்டார். உடனே, ரைட்டரிடம் ஏதோ வாதிட்டுக் கொண்டோ, வைதுகொண்டோ நின்ற பொன்னுச்சாமி, ஒடோடிவந்தார். விறைப்பாய் ஒரு சலூட் அடித்தார். அது, சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரனுக்கா, எஸ்டேட் முதலாளி பூமிநாதனுக்கா என்பது தெரியவில்லை. பூமிநாதன் வாய் திறந்தார்.

“பொன்னுச்சாமி! என் எஸ்டேட்ல நடந்த தற்கொலை விஷயமாய் எஸ்டேட் பசங்க ஒங்க ஸ்டேஷனுக்கு வாராங்களாம். காதுல போட்டுட்டேன். இனிமேல் கம்புலயோ, துப்பாக்கியிலயோ போடுறது ஒங்க பொறுப்பு. ஒங்க அய்யாவுக்கு ஊர் விஷயத்துல மூளையில விஷம் பாஞ்சுட்டு. அவரைக் குழப்பாதீங்க. ஒங்களால செய்ய முடியுறதை யெல்லாம் செய்யுங்க.’

ஏட்டு பொன்னுச்சாமி, தாமோதரனைப் பார்த்தார். வெளியே இருந்த ரைட்டரைப் பார்த்தார். பிறகு கிசு கிசு குரலில் ‘எங்க சப்-இன்ஸ்பெக்டர் அய்யா ஒரு வார்த்தை சொல்லட்டும், ஒங்களுக்கு எவன் எவன்லாம் எதிரியோ, அவன்களை வெட்டாம்பட்டி கொலை கேஸ்ல சிக்க