பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

நெருப்புத் தடயங்கள்



போய் கிடந்தான். வாய் செத்துப் பார்த்தான். அவனுக்கு எல்லோருமே கோடுகோடுகளாய்த் தெரிந்தன. மங்கிய நிஜங்களாக, கசங்கிய நிழல்களாகத் தெரிந்தன. -

தொழிலாளர் தலைவர், தன் தோழர்களைப் பிடித் திழுத்தபடி, மவுனமாக வெளியேறினார். அவர்கள் போவதையே பார்த்த ஏட்டு பொன்னுச்சாமி, எகிறினார்:

“எல்லாம் நீங்கள் கொடுக்கிற இளக்காரம் சார். ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்கன்ன, உள்ளே போட்டிருப்பேன். இதுக்குத்தான் அந்த ரைட்டர் கிட்டே அப்பவே சொன்னேன், வெட்டாம்பட்டி கொலை கேஸ்ல அடையாளம் தெரியாத-ஆனால் நேரில் காட்டக் கூடிய’ என்கிற வரியை எழுதியே ஆகணும்; அப்போதுதான், இப்போ வந்துட்டுப் போன பசங்கள பிடிச்சிட்டு வந்து பாரேட்” பண்ணலாம்; பண்ணணும்.”

தாமோதரன், பேசுபவர் தெரியாமல், பேசுவதும் புரியாமல் அப்படியே கிடந்தான். ஏட்டுப் பொன்னுச்சாமி, அவனை இளக்காரமாகப் பார்த்தபடியே, ரைட்டரை நோக்கிப் போனார்.

இருவருக்கும் இடையே பயங்கரமான சத்தம். நீ ஆயிரம் சொன்னாலும் நான் அப்படி எழுத மாட்டேன்’ என்றும், ஒன்னை எழுத வைக்காமல் விடமாட்டேன்’ என்றும் ஏட்டின் சவால்; ரைட்டரின் எதிர் சவால்.

தாமோதரனோ, சவலை மனிதனாகக் கிடந்தான். ஒரு மணி நேரம் ஒடியிருக்கும். பலத்த சத்தம் கேட்டு, ரைட்டரும், பொன்னுச்சாமியும் பதறியடித்து வெளியே ஒடினர்கள். ஏட்டு பொன்னுச்சாமி, ஒடிய வேகத்திலேயே திரும்பினார். நாற்காலியில் தொங்குவது போல் கிடந்த தாமோதரனை உலுக்கியபடியே கதறினார். முரடனுக்குப் பயம் வந்தால் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவதுபோல் பேசினார்.