பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

219.

சார், சார்: எஸ்டேட் தொழிலாளிங்க திரண்டு. வாராங்க. முந்நூறு பேருக்கு மேல வாராங்க. துப்பாக்கிப் பிரயோகம் செய்யாமல், நாம் தப்பிக்க முடியாது.”

21

மரித்தது போல் காட்சி தந்த அந்தப் பகுதி உயிர்த்தெழுந்தது போல் தோன்றியது. சுற்றுப்புறத் தென்னை மரங்களும், புன்னை மரங்களும் இவற்றின் இடையிடையே அப்பிக் கிடந்த ஆயிரமாயிரம் செடிகளையும் மீறி, தலை வாசல்களில் பல தலைகள் தென்பட்டன. ஒருவரை ஒருவர், வினாக்குறியோடு பார்த்தபடி, விடை தேடுபவர்கள்போல் பலர் ஆண்களும், பெண்களுமாய், காவல் நிலையம் அருகே வந்து சாலையைப் பார்த்தார்கள். பழையபடியும் அந்த ‘மண்டைக் காடு’தான் வந்து விட்டதோ என்று சந்தேகப் பட்டு, பலர், சிலம்புக் கம்புகளையும், மீன் முள்களையும் எடுப்பதற்காகத் திரும்பப் போனார்கள். அதற்குள் துாரத்தே கேட்ட இடிமுழக்கம், திரும்பியவர்களை திரும்ப வைத்தது. பிரிந்தவர்களைப் பிணைத்தது. அது புதியவகை ஒலி முழக்கம். வேறுவகை சத்தம்.

‘ஒழிக... ஒழிக... போலீஸ் பாரபட்சம் ஒழிக. .

‘வாழ்க... வாழ்க... தொழிலாளர் ஒற்றுமை வாழ்க’

“காவல் துறையே, காவல் துறையே, பட்டப் பகல் கொலை ஒன் பார்வையில் படவில்லையா?”

சுமார் முந்நூறு தொழிலாளர்கள், மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நீண்ட கொடி பிடித்து, நெடிதுயர்ந்த இரண்டு ஆண்கள், ராணுவ வீரர்கள் போல், காலெடுப்பும், கால் வைப்பும் பார்ப்பவர்கள் பார்வையில் துலக்கமாய் தெரியும்படி நடை போட, அவர்களுக்கு மத்தியில் முப்பது வயதுப்