பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

221

தரனும் ஆணையிடுவான் என்று எல்லாப் போலீஸ்காரர்களும் அனுமானித்து சப்-இன்ஸ்பெக்டரிடம் கேளாமலே அவர்களாகவே ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்தார்கள். தாமோதரன் கடைசியில் வந்து அவர்களுக்கு முதலாவதாக நின்றான். அவன் கையிலும் ஒரு துப்பாக்கி. எவர்களை ‘பாரேட்’ செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அவர்கள் தலைமையில் தொழிலாளர்கள் ‘பாரேட்’ செய்வதைப் பார்த்த ஏட்டு பொன்னுச்சாமி எகிற முடியாமல் நின்றார். தொழிலாளர் கூட்டத்தின் வருகையை சந்திக்கத் தயாரானவர்கள் போல் எல்லாப் போலீஸ்காரர்களும் சாலையின் குறுக்கே மனிதச் சுவராகவும், அந்த மனித வேலியின் முள் கம்பிகள் போல் உயர்ந்து நின்ற துப்பாக்கிகளுமாய் தரிசனம் தந்த போது-

தொழிலாளர் கூட்டம், சிறிது நின்றது. ஒரு சிலர் ஓடத்தான் செய்தார்கள். ஆனாலும் பெரும்பாலான தொழிலாளர்கள், “பாட்டாளி வர்க்கம் ஜிந்தா பாத்...... ஜிந்தா பாத்” என்று முழக்க மிட்டார்கள். உத்வேகக் குரலோடு, போலீசாரை எதிர் நோக்கி, மார்புகளை நிமிர்த்திய படியே முன்னேறினார்கள்.

ஊர்வலத்தின் நடுவில் நின்ற பெண்களும், “பூமிநாதன் எங்கள் தோழனேக் கொன்னது மாதிரி, நீங்களும் வேணுமானால் எங்களை சுட்டுத்தள்ளி, ஒங்க ரத்த தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கடா!” என்று சிதறி, முன்னேறப் போனார்கள். பலர், அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள்.

ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு, நீண்ட காலக் காரணங்கள், உடனடிக் காரணங்கள் என்று இரண்டு வகைக் காரியக் காரணங்கள் உண்டு. ஏற்கனவே சூடுபட்ட கலாவதி தன் நெஞ்சிலும், ஆன்மாவிலும் ஆவிபறக்கும். அனல் கங்கை ஊதிக் கொண்டிருக்கும் சித்ரவதையில் கரிந்து கொண்டிருந்த தாமோதரன், ஊர்வலத்தின்