பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

223

“உம்... எல்லாரும் ஸ்டேஷனுக்குப் போங்க. இது எனக்கும், இவங்களுக்கும் மட்டும் இடையே உள்ள பிரச்சனை. உம், போங்க” என்றான்.

இதர போலீஸ்காரர்கள் தயங்கியபோது, ஏட்டு பொன்னுச்சாமி ஏதோ பேசப் போனார். உடனே தாமு “கோ மேன் ஐ சே...ஒபேய் மை ஆர்டர்...” என்று கூட்டத்தின் ஒட்டு மொத்தக் குரல் அளவிற்குக் கத்தினான். அவனால் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று அவன் முகத்தைப் பார்த்த ரைட்டர் புரிந்து கொண்டார். அவர், கண்களால் சைகை செய்ய, பொன்னுச்சாமி உட்பட எல்லா போலீஸ்காரர்களும், காவல் நிலையத்திற்குள் போகவில்லை யானாலும், மேட்டோரம் போய் நின்றபடி, துப்பாக்கிகளை தொங்கப் போட்டார்கள்.

தாமோதரன், கூட்டத்தை நோக்கி நடந்தான். அவன் கண்கள் எவளைப் பார்க்கக் கூடாது என்று நினைத்ததோ, அவளையே வலம் வந்தது. காக்கி யூனிபாரம் போட்டிருந்ததாலோ என்னவோ அதட்டலோடு ஆணைக் குரலில் பேசினான்.

“மொதல்ல டிராபிற்கு இடஞ்சல் இல்லாமல் ஒரு ஓரமாய் வாங்க. பெர்மிஷன் இல்லாமல் ஊர்வலமாய் வாரது, சட்டப்படி குற்றமின்னு தெரியாதா? அது கிடக்கட்டும். மொதல்ல ஓரமாய் நில்லுங்க.”

கூட்டம், அவனுள் ஒலித்த அந்தரங்க ஆத்மாவை புரிந்தது போல ஒதுங்கியது. இதனா ல்கூட்டத்தினரின் அகலம் பாதியாகக் குறைந்து, நீளத்தில் கால்வாசி கூடியது. தாமோதரன், அவர்களை நெருங்கிப் போய் நின்றபடி “என்ன விஷயம்?” என்றான் அதட்டலோடு.

தொழிலாளர் தலைவர்கள், அவன் முன்னால் வந்தார்கள். எத்தனையோ அடக்குமுறைகளைக் கண்ணால் கண்டதுடன், அனுபவித்தவர் போலவும் தோன்றிய முன்பு