பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

நெருப்புத் தடயங்கள்

அவரிடம் வந்த அதே அந்தத் தலைவர் நிதானமாக, அழுத்தமாகப் பேசினார்.

"இந்தம்மா கொலை செய்யப்பட்ட எங்கள் தோழன் மார்த்தாண்டத்தின் மனைவி. எஸ்டேட் முதலாளி பூமிநாதன் மேற்பார்வையில்..."

"ஒன் மினிட், ரைட்டர்.. பிளீஸ்... கம்!"

ரைட்டர், வந்தார்.

"இவங்க சொல்றதுல கொலை சம்பந்தப்பட்ட தகவல்களை எழுதுங்க, ஒங்க பேரு?"

"வைத்திலிங்கம்!"

"உம், சொல்ல வேண்டியதைச் சொல்லுங்க."

"எங்கள் தோழன் மார்த்தாண்டன், பூமிநாதன் எஸ்டேட்ல கொத்தடிமைகளைவிட மோசமாய் நடத்தப்பட்ட சகோதர சகோதரிகளை ஒன்று திரட்டி சங்கம் அமைக்கப் போனான். பூமிநாதன் சொல்லிப் பார்த்தார். பதவி உயர்வாலும், பணத்தாலும் வலை விரித்தார். மார்த்தாண்டன் கேட்கல. சம்பவம் நடந்த நாளில், மத்தியான வேளையில், எஸ்டேட் பேக்டரில தன்னந் தனியாய் எதையோ கழுவிக் கொண்டிருந்த மார்த்தாண்டத்தை பூமி நாதன், தன் தனியறைக்குக் கூப்பிட்டார். அவன் போனான். உடனே வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கு. இதையடுத்து பூமிநாதனோட மேற்பார்வையில், அவரோட கையாட்கள் உள்ளறையில் இருந்து வெளிப்பட்டிருக்காங்க, மார்த்தாண்டனைக் குப்புறத்தள்ளி, அவனோட முகத்துலயும், பிடறியிலயும் இரண்டு தலையணைகளை வைத்து மூச்சை அடக்கி, உயிரையும் அடக்கிட்டாங்க. பகல் முழுவதும் பிணத்தை அங்கேயே வச்சுட்டு, ராத்திரியில் மரத்துல கயிற்றைக் கட்டி தொங்கப் போட்டுட்டார்."

"மறுநாள், பூமிநாதன் அனுப்புன கார்லயே ஏட்டு பொன்னுச்சாமி விசாரிக்கப் போனார். அதுக்கு முன்னதாக,