பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

225

நானே டெலிபோனில் விவரம் சொல்லிட்டு, அப்புறம் எழுத்து மூலம் புகாரும் கொடுத்தேன். என் புகார் மீது எப். ஐ. ஆர். ல எழுதுனதுக்கான ஸ்லிப் எனக்கு இன்னும் வர்ல. குற்ற விசாரணையில் என்குயரி... இன்குயரி... இன்வெஸ்டிகேஷன்... அதுதான் பெரிய விசாரணை, உள்விசாரணை, புலன் விசாரணைன்னு மூன்று உண்டு. எதுவுமே நடத்தப்படல. எவிடென்ஸ் கொடுக்கப் போன எங்களையும்... அப்போ... பொன்னுச்சாமி ஒரு பொருட்டாய் நினைக்கல. உள் விசாரணையை அவர் ஒழுங்காய் செய்திருந்தால்,கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட தலையணைகளைக் கைப்பற்றி இருக்கணும். மருத்துவ பரிசோதனையில் ஒ. பி., அட்மிஷன், இன்குஸ்ட் மூன்றையும் கேட்டிருக்கணும். தடயங்களையும், சாட்சிகளையும் கலைக்காமல் இருக்க, பூமிநாதனையும், அவருடைய அடியாட்களையும் கைது செய்திருக்கணும். அதற்கு மாறாய் நீங்க - அதாவது சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் - பூமிநாதனுடன் கார்ல பறக்கார். அவருக்கு குட்டாம்பட்டியில பட்ட அடி, இந்த் போலீஸ் நிலையத்தில் நெறியாய் கட்டுது. எங்களை ஏட்டு பொன்னுச்சாமி ஆபாசமாய் திட்டுறார். எங்கள் தோழன் மனைவியை மாசுபடுத்துறார். ஆகையால் இன்று எங்களுக்கு, துக்க நாள். இரண்டு பேரைப் பறிகொடுத்ததை அனுஷ்டிக்கிற நாள். எங்கள் தோழன் மார்த்தாண்டமும், நாங்கள் நேசித்த சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரனும் செத்துப் போனதையும், அவர்கள் செத்ததுக்கான காரணங்களைச் சொல்லவும். எஸ். பி. அலுவலகத்தைப் பார்த்துப் போறோம். இந்த போலீஸ் நிலையத்தை தாக்குறதுக்காக வர்ல. எங்கள் கரங்களில் ஆயுதங்கள் இல்லாததே இதற்கு சாட்சி. தடுத்தால் மீறுவோம்.”

தாமோதரனும், தொழிலாளர் தலைவரும், நேருக்கு நேராய் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, தாமோதரன் கண்களைத் தாழ்த்தியபடி, “நீங்க சொல்லுங்கம்மா”
நெ-15