பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

நெருப்புத் தடயங்கள்


என்று வேலம்மாவைப் பார்த்துக் கேட்டான். அதற்குள் அவன் வெல வெலத்தான்.

வேலம்மா, அவன் சொன்னது கேட்காததுபோல், தொலை நோக்காகப் பார்த்தாள். பின் வரிசையில் நின்ற பெண்கள் பலர், அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். தொழிலாளர் தலைவர், அவள் முன்னால் வந்து "சப்-இன்ஸ்பெக்டர் மேல, நமக்கு நம்பிக்கை இருக்கோ இல்லியோ, நடந்ததை சொல்லித்தான் ஆகணும். சொல்லும்மா" என்றார்.

வேலம்மா, தலையை மெள்ள மெள்ள நகர்த்தினாள். எல்லோரும் அவளையே கண்களால் ஈரம் மொய்க்கப் பார்த்தபோது, அவள் கூட்டத்தை ஏறெடுத்துப் பார்த்து விட்டு, அந்த வேகத்திலேயே, தலையை தாழ்த்திக் கொண்டு "அன்னிக்குக் காலையில், என் ராசா... என் மன்னவனே... என்னை இந்தக் கோலத்துல விட்டுட்டுப் போயிட்டியே... பாவிங்க ஒன்னை துள்ளத் துடிக்க கொன்னதும் இல்லாமல்... நீ என்னோட நடத்தையில் சந்தேகப்பட்டு, தற்கொலை பண்ணுனதாய் சொல்றாங்களாமே. நான் அந்தப் பேச்சைக் கேட்டுட்டு, இன்னும் சாகாமல் இருக்கேனே..." என்று அழுதழுது அரற்றினாள்.

தலையில் அடித்தடித்து, சொல்ல வந்தது தெரியாமல், ஏக்கமே ஒலியாக, இதயமே கண்ணானதுபோல் விம்மினாள். பொங்கினாள். புகைந்தாள். மார்பிலும், தலையிலும் மாறி மாறி அடித்தாள். சில பெண்கள் அவளைப் பிடித்துக் கொண்டார்கள்.

வேலம்மா கண்களைத் துடைத்தபடியே, "அன்றைக்கு வெள்ளிக்கிழமை. காலையில் சாப்பிட்ட என் ராசா... 'ஒன் கையில... என்ன மந்திரம் இருக்குடி ஒரு நாள்கூட சாப்பாடு அலுப்புத் தட்டலன்னு'... அய்யோ . என் ராசா... என் மவராசா..." என்று சொன்னபடியே, கூட்டத்தை விட்டு, தனியாக ஒடி, ஒரு ஆலமரத்தருகே