பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

நெருப்புத் தடயங்கள்


“ஆமாய்யா, அவரைத்தான் கேட்டேன். அந்த அக்கூஸ்டை நாளைக்குக் காலையில் பத்து மணிக்கு ஸ்டேஷன்ல வந்து மார்த்தாண்டன் கொலை விஷயமாய் ஆஜராகச் சொல்லு. இல்லன்னா, அரெஸ்ட் வருமுன்னு நான் சொன்னதாய், நானே சொன்னதாய் சொல்லுங்க. குயிக். அவரோட நான் பேச விரும்பல.”

“சார்.”

“போய்யா. நான் பெரிய அக்கூஸ்ட், நீ சின்ன அக்கூஸ்ட். போய்யா!”

“சார் உடம்புக்கு ஏதாவது? ஆஸ்பத்திரில...”

“என்னோட உடம்பு மிருக வகை... ஒன்னை மாதிரி. எனக்கு ஆஸ்பத்திரி இனிமேல் சுடுகாடுதான்... ஐ... லே... யு... கெட்அவுட்... ஒபேய் மை கமாண்ட்.”

பொன்னுச்சாமி, விரைப்பாக வெளியேறினார். தாமோதரன், பேசியது தெரியாமல் பேசிவிட்டு, நாற்.காலியில் கை பரப்பி, கால் பரப்பிக் கிடந்தான். அவன் கண் முன்னாலேயே, காது கேட்கும் தூரத்திலேயே, ஏட்டு பொன்னுச்சாமி, “வளர்த்த கிடா... நன்றி கெட்டவன்... கவலப்பட வேண்டாம் முதலாளி... ஆண்டிஸிபேட்டரி பெய்ல...” என்பன போன்ற வார்த்தைகள் கலக்க, டெலிபோனை நாக்கால் குத்திக் குடைவது கேட்காமலே, குற்றுயிராய் கிடப்பவன் போல் கிடந்தான். சும்மா கிடந்தான். சூன்யமாய் கிடந்தான்.

நீண்ட நெடிய நேரங்கழித்து, ரைட்டர், கையில் ஒரு கத்தைக் காகிதத்தோடு வந்தார். அவன் நாற்காலியை லேசாய் குலுக்கினார். அவனோ, கண்களை மட்டும் உருட்டினான். உடனே ரைட்டர் ஜனங்களுக்கு ஒங்க மேல அந்தப் பழைய நம்பிக்கை வந்திருக்கு சார். அமைதியாய் போயிட்டாங்க. ஆனாலும் நாலு நாள் டைம் கொடுத்திருக்காங்க. எல்லா ஸ்டேட்மெண்டையும் ரிக்கார்ட் பண்ணிட்டேன் சார். எவிடென்ஸைப் பார்த்தால்