பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

229

மார்த்தாண்டம் கொலை செய்யப்பட்டது மாதிரி தெரியுது சார்” என்றார்.

தாமோதரன், சுதாரித்தான்.

“நாளைக்கு அக்கூஸ்டை வரச் சொல்லியிருக்கேன். குயிக்காய் சார்ஜ்ஷீட் பைல் பண்ணுங்கோ.’’

ரைட்டர், தனது தொழில் தர்மத்தின் பின்னணியில், அவனேயே அதிர்ச்சியுடன் பார்த்தபோது, அவரைப் போகலாம் என்று கையாட்டி விட்டு தாமோதரன், மயக்கம் கலையாதவன்போல், பிரமை குலையாதவன்போல், உடம்பின் எந்த அங்கமும் ஆடாமல் அசையாமல் இருக்க, அப்படியே கிடந்தான். திடீரென்று, மேல் நோக்கி எழுந்தான். மேஜையில் இரண்டு காகிதங்களைப் பரப்பியபடி, ம்டமடவென்று எழுதினான். நீரற்ற வறட்சிக் கண்களுக்கு நிவாரணம் தேடுபவன் போல் எழுதினான். பிறகு “மிஸ்டர் சபாஸ்டின்...” என்றான். ரைட்டர் வந்து, அவன் கண்களைத் திறக்காமல், உதடுகளைக் கடித்தபடி இருப்பதைப் பார்த்துவிட்டு “கூப்பிட்டீங்களா சார்” என்றார்.

“ஆமாம்...இந்தாங்க...இது என்னோட லீவ்லெட்டர்... நாளேயில இருந்து இரண்டு மாதத்துக்கு லீவ் போட்டிருக்கேன்...நீங்கதான்... நாளையில் இருந்து ஸ்டேஷனுக்கு இன்சார்ஜ்...மார்த்தாண்டம் கேஸ் ஒங்க பொறுப்பு. நீதி தவறாமல் சார்ஜ்ஷீட் போடுவீங்க என்கிறதுல எனக்கு சந்தேகம் இல்ல... இந்த கேஸை மூடி மறைக்கிறதுக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன். நீங்க...என் மேலேயும் சார்ஜஸ் பிரேம் பண்ணலாம். ஏன்ன...நான் இனிமேல் ஒங்க பாஸ் இல்ல. இந்தாங்க ... நாளைக்கே எஸ்.பி கிட்ட பெர்சனலாய் கொடுங்க...”

ரைட்டர், அந்தக் காகிதத்தை வாங்கிப் படித்தார். பிறகு “நோ...நோ...நத்திங் டுயிங்” என்று கத்தியபடியே அதை கிழிக்கப் போனார். தாமோதரன், “ஐ ஸே” என்று அதிகார மிடுக்கோடு ஆணையிட்டான். அவர் ஒடுங்கிப்