பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

நெருப்புத் தடயங்கள்

போனவராய் நின்றபோது, தாமோதரன் எழுந்தான் அவரது கைகளை எடுத்து முத்தமிட்டான். பிறகு அமைதியாகப் பேசினான்:

“ஒங்களை மாதிரி...ஒரே ஒரு சில நல்லவங்களாலதான் ஸார் இன்னும் நம் டிபார்ட்மெண்ட் பிழைக்குது... ஆனால் நான்...? என்னோட நிலைமை, பாரதத்துல வந்த கர்ணனோட நிலைமை... பலியான அரவானோட நிலைமை... ராமாயணத்தில் வார கும்பகர்ணன் நிலைமை. ஆனால் அவங்களை மாதிரி ஆகாமல், நான் விலகிக்கிறேன். ஒரு நேர்மைவான்கிட்ட பொறுப்பை ஒப்படைச்ச திருப்தியோடு போறேன்...

“நான் போகப்போற பாதை எனக்கே தெரியல... வழி இருந்தபோது தப்பாய் நடந்தேன்...இப்போ சரியாய் நடக்க நினைக்கிறேன், வழி தெரியல. திக்குத் தெரியாத காட்டுக்குள்ளே கெட்டுத்திருந்திய இந்த சின்னவன் போறேன். என்ன ஆசீர்வதிங்க பிரதர்...என் பாவத்தை நீங்களாவது மன்னிச்சிடுங்க பிரதர்...ஏன்ன... நீங்கள் என்னை மன்னிக்கிறது... ஏசுநாதர் என்னையும் ஏற்றுக்கொண்டது மாதிரி ... கலாவதி, நீ மன்னிப்பாயா? மாடக்கண்ணு மாமா மாமா...”

ரைட்டர், குலுங்கிக்குலுங்கி அழுதார். தாமோதரன் புறப்படத் தயாரானான், புரியாத ஊருக்கு தெரியாத வழியில்.

22

ஒலிபெருக்கிச் சத்தம் – அதுவும் ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்ற அசம்பாவித பாடல், ஊருக்கு வெளியேயும், மேளச் சத்தம் ஊருக்கு உள்ளேயும் ஒலித்துக் கொண்டிருந்தன. மேளச் சத்தமும், சினிமாப் பாட்டும்