பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

243

"குட்டிமணியின் கொலை மரணம் ஈழத் தமிழகத்தின் எல்லை விரிப்புக்கள்."

"இப்போதைய தேவை-எப்படியும் எம்மவுரைக் காத்தல்."- என்று ஆர்ப்பரித்தன.

அணி திரண்ட மாணவிகள், கொடிக்கம்ப மேடைக்கு முன்னால் கம்பீரமாய் நின்றார்கள். தமிழரசி ஒரு அறைக்குள் போய் இரண்டு பக்கமும் கொம்புகளை எல்லைகளாய்க் கொண்ட துணி பேனரைக் கொண்டு வந்தாள். அதில் "இலங்கை அரசே! இனக் கொலையை நிறுத்து!" என்ற சிவந்த வாசகம், வெண்மை நிறப் பின்னணியில் ரத்தம் போல் ஒளிர்ந்தது.

ஊர்வலத்தின் முகப்பில், இந்தப் பேனரை, யார் பிடிக்கவேண்டும் என்று, தமிழரசி, இதர ஆசிரியைகளுடன் விவாதித்தாள். பிறகு கூட்டத்தை ஒட்டு மொத்தமாய் பார்த்துவிட்டு, பின் வரிசையில் நின்ற இரண்டு பெண்களை கையாட்டிக் கூப்பிட்டாள். அவர்கள் ஒன்றும் புரியாமல் அவளை நெருங்கியபோது, தமிழரசி பேனரைக் கொடுத்தாள்.

அவர்களில் ஒருத்தி என். ஸி. ஸி.; இன்னொருத்தி இந்தக் கல்லூரியில் படிக்கும் இலங்கைத் தமிழ் மாணவி, தமிழர்கள் பெரும்பான்மையாய் வாழும் யாழ்ப் பாணத்துக்காரியல்ல. தமிழினம் கொன்று குவிக்கப்பட்ட கொழும்பு நகரில் குடிகொண்ட குடும்பத்தினள். இலங்கையில் கொலைக் கொடுங்கோன்மை துவங்கியதிலிருந்து, குடும்பத்திடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. பெற்றோருடன், தமையன்கள் இருவரும், தம்பியும், தங்கையும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை,.கொழும்பு நகரமே, அங்குள்ள தமிழர்களுக்கு, உயிரோடு கூடிய சமாதியாய் மாறிய பிறகு, தனது குடும்பமும் உடலற்றுப் போய்விட்டதா அல்லது அகதி முகாம்களில் உணர்வற்றுக் கிடக்-