பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

நெருப்புத் தடயங்கள்


தென்றால், உலக வரலாற்றில் இதுவரை இடம் பெறாத நரமாமிசவேட்டை. மற்ற நாடுகளில் நடந்ததுண்டு எப்படி? இரு தரப்பார் மோதுவார்கள். ஆனால் ஒரு தரப்பு குறைவாயும், இன்னொரு தரப்பு மோசமாகவும் பாதிக்கப்படும். ஆனால் இலங்கையில் நடப்பதோ ஒருதலைக் கொலைகள். நிராயுதபாணிகளான நம்மவர்களை நிர்மூலமாக்கும், சிங்களவ கோர தாண்டவம். கடலுக்கும், பூமிக்கும், சூரியனுக்கும், ஆகாயத்திற்கும், காற்றிற்கும் அவையே உதாரணங்கள் என்பதுபோல், இலங்கை இனப் படுகொலைக்கு, அதுவே உதாரணம். வேறு எடுத்துக்காட்டால் அதை விளக்கமுடியாது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிலேயே இலங்கைத்தமிழர்கள், நமக்கு பூகோளப் படியும், பண்பாட்டுப்படியும் நெருக்கமானவர்கள்.

தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து, சைவ சித்தாந்த இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்ட ஆறுமுக நாவலர், யாழ் ஆராய்ச்சி செய்த வித்தகர் விபுலானந்த அடிகள், இப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் உவைஸ், 'கள்ளத்தோணி' நாடகம் எழுதிய எம். ஏ. அப்பாஸ், திறனாய்வுத் துறைக்கு புதிய வடிவம் கொடுத்த டாக்டர் கைலாசபதி, டாக்டர் கா சு. சிவத்தம்பி, தமிழகத் தமிழ் எழுத்தர்களை விடச் சிறப்பாக எழுதும் டொமினிக் ஜீவா, யோகநாதன், டேனியல் ஆகியோர் தமிழை செழிக்க வைத்த இலங்கைச் செல்வங்கள். உலகத் தமிழ் இலக்கியத்தில் இன்று வழிகாட்டிக் கொண்டிருப்பது யாழப்பாணத் தமிழ் இலக்கியமே. இந்த யாழ்ப்பாணத்தில் ராணுவ அடக்கு முறையும், தமிழர்கள் சிறுபான்மையாய் வாழும் இதர பகுதிகளில் இனக்கொலையும், அன்றாடச் செய்தியாகிவிட்டது.

ஆனாலும், நாமும், நம் தலைவர்களும், இப்போது கண்ணீர் வடிப்பதைப்பார்க்கும்போதும், கேட்கும்போதும்,