பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

நெருப்புத் தடயங்கள்


இடத்தில் தமிழரசி உட்கார்ந்தாள். ஆனந்தமாயும், அழுகையாயும் மனம் போட்ட கூச்சல், கால்களை நடக்க விடவில்லை. கீழே உட்கார்ந்த தமிழு, அவனை குழந்தை போலவும், குழந்தையைப் போலவும், பார்த்தாள். அவளருகே உட்கார தனக்குத் தகுதியில்லை என்று தாமோதரன், தன்னைத்தானே கேட்டபடி தனித்து நின்றான். தமிழரசி, அவன் கையைப் பிடித்திழுத்து உட்கார வைத்தாள். உட்கார்ந்தபடியே அவன் பக்கமாக தன்னை நகர்த்திக் கொண்டாள்,

"ஒங்க தங்கை விஜயா கல்யாணம் நல்லா நடந்துதா?"

"ஒனக்கு அது அண்ணன் கல்யாணமாய் தெரியலியா?"

"அண்ணனாய் இருந்தால் லட்டர் போட்டிருப்பானே. நான் போகக் கூடாதுன்னோ.. என்னவோ கல்யாணத்துக்குப் பிறகு தான் வெறும் அழைப்பு வந்தது. அப்புறம் என் மனசு கேட்கல. அண்ணன் கல்யாணத்துக்குப் போக முடியலியேன்னு துடிச்சுது. என் மனசு என்ன மனசோ! நீங்க போனீங்களா?"

"உம், போய்த் தொலைச்சேன்!"

"ஊர் எப்படி இருக்குது?"

"ஊரா? ஏதோ இருக்குது."

"சித்தப்பாவும், கலாவதியும் எப்படி இருக்காங்க? கல்யாணத்துக்கு வந்தாங்களா? எங்கம்மா நான் வர்லன்னு துடிச்சிருப்பாளே? ஊர்ல நடந்ததை ஒன்றுகூடப் பாக்கி இல்லாமல் சொல்லுங்க. உம். ஒங்களத்தான்.

தாமோதரன், அந்த இளயிருட்டில், அவளைப் பயத்தோடு பார்த்தான். அனிச்சையாக, சிறிது விலகி உட்கார்ந்தான். அப்படியும் தன்னை அடக்க முடியாமல் எழுந்தான். அங்குமிங்குமாய் தலையைச் சுற்றினான். அவளுக்கு இன்னும் ஊரில் நடந்த விவரங்கள் தெரியாமல் இருப்பதில், ஏதோ ஒருவகையில் அவனுக்குத் திருப்தி. உண்மை