பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

நெருப்புத் தடயங்கள்

பிரச்சனை இல்லையானாலும், தன் பிரச்சனையை மறைப்பதற்காக, அவர்களைப் பிரச்சனையாக்கினான்.

"வினைதீர்த்தான்-பொன்மணி ஊர்ப்பக்கம் வரவே இல்ல. ஒனக்காவது ஏதாவது தகவல் தெரிஞ்சுதா?"

தாமோதரன் தனக்கு மீண்டும் கிடைத்து விட்ட காதல் பெருமிதத்தில் கடல் மண்ணை அள்ளி அள்ளி தூரத்தே எறிந்த தமிழரசியின் கரங்கள், மல்லாந்து மண்ணோடு நின்றன. அவனை அவனுக்குத் தெரியாமலே பார்த்தாள். அவன் பார்வை தன் மீது பட்டபோது தலையைத் தாழ்த்தினாள். நாணத்தால் கவிழ்ந்த தலை அவமானத்தால் அதிகம் தாழ்ந்தது. எப்படிச் சொல்ல முடியும்? வினைதீர்த்தானிடமிருந்து பொன்மணியைப் பிரிக்க நினைத்து-பின்னர் அதை செயல்படுத்தினால் அது தனது காதலுக்கே சாபமாகி விடும் என்ற காதல் பயத்தாலும், அவர்களைப் பிரிப்பது முறையில்லை என்ற தார் மீகப் பயத்தாலும், அடுத்துக் கெடுப்பது. அநியாயம் என்ற தர்ம பயத்தாலும், தானே முயன்று, சட்ட ரீதியாக அவர்கள் திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்ததை எப்படிச் சொல்வது? நேற்று கூட பொன்மணி போட்ட கடிதம் வந்ததை எப்படிச் சொல்வது? அப்படிச் சொன்னால் அவர்கள் ஊரில் இருந்து வெளியேறியதற்கும் தனக்கும் சம்பந்தம் என்று ஆகிவிடுமே. காதலி என்று ஆசையோடு பார்க்க வந்தவர் துரோகி என்று விலகக் கூடாதே. அதற்காகச் சொல்லாமல் இருப்பதா? அது துரோகங்களிலேயே மிகப் பெரிய துரோகம். சொல்வேன்! இந்த இனிமையான நேரத்தில் அல்ல, நாளைக்கு. நிதானமாக-பீடிகையாக சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டும். இப்போது என் தாமுவின் சிந்தனையும் செயலும் எனக்கே... எனக்கே...

தமிழரசியும் எழுந்தான். இருவரும் கடலை நோக்கி தந்தம் குற்றவுணர்வுச் சுமையோடு நடந்தார்கள். விடமாட்டேன் என்பதுபோல் ஒருவர் கரத்தை இன்னொருவர்