பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

257


"என் மூச்சை எப்படி என்னால கணக்கெடுக்க முடியாதோ, அப்படி ஒங்களை நான் நினைத்ததை கணக்கெடுக்க இயலாது. உண்ணும் போதும், உறங்கும்போதும் ஒங்களைத்தான் நினைச்சேன்னு சொன்னால், அதுக்கு இடைப்பட்ட நேரத்துல நினைக்கலன்னு அர்த்தமாயிடும். வாழ்க்கை தற்காலிகம் என்றாலும் வாழ்கின்ற ஜீவராசிகள் நிரந்தரம் என்று எல்லா மதங்களும் சொல்லுது. இப்படி ஒரு நிரந்தரத்துவம் கண்டு ஏனோ நான் என்னுள்ளே பயந்திருக்கேன், ஆன்மா நிரந்தரம் என்றால், முடிவு இல்லாத எதுவும் போரடிக்கிறது மாதிரி இதுவும் போரடிக்கு மேன்னு பயப்படுறேன். ஆனால் ஒங்களோட நிரந்தரமாய் இருக்க முடியும் என்கிற நினைப்பு வரும்போது, ஆன்மா மட்டுமில்ல... இந்த வாழ்க்கையும் நிரந்தரமாய் இருக்கணுமுன்னு நினைக்கிறேன். ஊர்ல நடந்த சம்பவங்களுக்குப் பிறகு நான் பட்ட பாடு... படுற பாடு... சில சமயம் என் தாமு அயோக்கியனாய் மாறி, அதனாலயே நான் அவரை வெறுக்கணுமுன்னுகூட நினைக்கிறேன். அப்படி ஆனால் கூட, என்னால ஒங்களை மறக்க முடியாது போலத் தோணுது. என்னை எப்போவாவது நினைச்சீங்களா? நினைக்காட்டாலும், நினைச்சேன்னாவது சொல்லுங்க, சினிமாவுல நடிப்புன்னு தெரிஞ்சாலும் நாம் லயிப்போமே அது மாதிரி, நீங்க பொய் பேசுனாக்கூட சுகம் கிடைக்கும். ஏன்னா, இனிப்புச் சுவை திகட்டும்; இது மாதிரி இனிய சுவை எப்பவுமே திகட்டாது. சொல்லுங்க என்னை எப்போ நாகர்கோவிலுக்குக் கூட்டிட்டுப் போவீங்க? நான் வேலையை விட்டுட்டு, இப்பகூட ஒங்களோட வரத் தயார். ஒங்களை விடமாட்டேன். என் தாமுவை இனி மேல் விடவே மாட்டேன். பேசுங்கத்தான்..."

தாமோதரனால், தாங்கிக் கொள்ள முடியவில்லை, அவள் அன்பு ஜோதியில் தான் கருகுவது போலிருந்தது. அப்புறம் புடம்போட்ட பொன்னாய் மாறியது போலிருந்தது. அத்தனை கருமை உணர்வுகளும் எரிந்து, அவனும்,

நெ-17