பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

259


என்று சொன்னபடியே அவனை நிறுத்த முயற்சித்தாள். அவன் விருப்பமில்லாமல் எழ, இருவரும் வேகமில்லாமல் எழுந்தார்கள். கடற்கரைச் சாலையில் வந்த ஆட்டோவில் ஏறி, அண்ணாசாலையில், நவீன ஓட்டல் ஒன்றிற்குச் சென்றார்கள். "என்ன சாப்புடுறே?" என்று தாமு கேட்டபோது, "மனசு நிறைவாய் இருக்கையில் சாப்பிடத் தோணாதோ" என்றாள் தமிழரசி.

சர்வர் 'போங்கள்' என்று கதவைத் தட்டித்தட்டி, தந்தி மொழியில் சொன்ன பிறகு, இருவரும் ஒரு டாக்சியில் ஏறினார்கள், விடுதியில் டாக்சி வந்ததும் தமிழரசி வெறுப்போடு இறங்கினாள். உள்ளே இருந்தவனைப் பார்த்து "உங்களோட லாட்ஜ் அட்ரஸை சொல்லலியே?" என்றாள்.

"எழுதிக்கிறீயா?"

"வாயால சொல்லுங்க. அதுகூட மனசில நிற்காட்டால் அப்புறம் இந்த உயிர் உடம்புல நிற்காதுன்னு அர்த்தம்."

"சீமா லாட்ஜ் ... ரூம் நம்பர் 15; தெற்கு கிராஸ் தெரு... நாலாவது அவென்யூ... அண்ணா நகர்."

"நாளைக்குக் காலையிலேயே சீக்கிரமாய் வந்துடுங்க. இந்த ராத்திரிப் பொழுதை எப்படித்தான் தாங்கிக்கப் போறேனோ? என்ன பேசாமல்... சீ... ரொம்ப மோசம்..."

"கவலப்படாதே. நாளைக்குச் சீக்கிரமாய் முடிஞ்சிடும்."

"என்ன உளறுறீங்க?"

"நாளைப் பொழுது சீக்கிரமாய் வந்துடுமுன்னு சொல்ல வந்தேன். விடிஞ்சிடும் என்கிறதுக்கும், முடிஞ்சிடும் என்கிறதுக்கும் வித்யாசமில்ல."

தமிழரசி, ஏதோ பேசப்போக, முதலில் இருமிப் பார்த்த டிரைவரும், விடுதி வாட்ச்மேனும் எரிச்சல்