பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

நெருப்புத் தடயங்கள்


பட்டதுபோல், முன்னவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார். பின்னவர் கம்பிக் கேட்டை, 'கிரீச் கிரீச்' என்று ஸ்டார்ட் செய்தார்.

பிரிய மனமில்லாமல் பிரிந்து அறைக்குள் வந்த தமிழரசியை, பத்மா கோபமாகப் பார்த்தாள். "என்னடி இது, ஒரு நாளும் இல்லாத திருநாள்?" என்று அவள் கேள்வி கேட்கப் போன போது, தமிழரசி, மேஜையில் கிடந்த கடித உறையைப் பிரித்தாள். நிதானமாக முதல் வரியைப் படித்தவள், கடிதத்தின் உடல் பகுதிக்கு வந்ததும் துடித்தாள். பின்னர் முகத்தைக் கடிதத்தின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் நகர்த்திக் கொண்டாள். இறுதியில் நிலையிழந்து, நிர்க்கதியானவள் போல் பத்மாவின் தோளில் சாய்ந்தாள். சாய்ந்தபடியே புலம்பினாள்; புரண்டாள்.

"சித்தப்பாவை சாகடிச்சிட்டாங்களாமே? கலாவதியை பைத்தியமாக்கிட்டாங்களாமே? இந்த தாமோதரன் இவ்வளவு பெரிய அயோக்கியனா? மோசம் போயிட்டேனடி பத்மா!"

25

த்மா துடிதுடித்தாள். என்னவெல்லாமோ சொல்லிவிட்டு, இறுதியில் தன் தோளில் பேச்சு மூச்சு இல்வாதவள் போல் கிடந்த தமிழரசியை "என்னடி... என்னடி" என்று சொல்லியபடியே அவளைக் கட்டிலில் கிடத்தினாள். படபடப்பாகி தமிழரசியின் மூக்கில் கை வைத்தாள். பிறகு கண்ணாடிக் குவளையில் இருந்து கையில் நீர் மொண்டு அவள் முகத்தில் அடித்தாள். வெளியே வார்டனிடம் சொல்லி டாக்டரை வரவழைக்கலாம் என்று வெளியேறப் போனாள்.

அதற்குள் தமிழரசி, உடம்பை அசைவற்றுப் போட்டபடி முகத்தை மட்டும் ஆட்டினாள். 'சித்தப்பா...கலா...