பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

நெருப்புத் தடயங்கள்


மாடக்கண்ணுவை, கையைக் காலைக் கட்டி, கிணத்துக்குள்ள தள்ளி கொன்னுட்டான். ஒரு பாவமும் அறியாத கலாவதியின் உடம்புல, கண்ட கண்ட இடத்துலயும், காணக் கூடாத இடங்கள்லயும் சூடுபோட்டு அவளைப் பைத்திய மாக்கிட்டான்."

"போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போன விவகாரத்தை, ஒன்னோட 'இவன்' சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் சரிக்கட்டிட்டான். நாகர்கோவிலுல ஒரு எஸ்டேட் முதலாளியோட ஊருக்கு வந்து, ஊரையே அநியாயத்துக்கு சமாதியாக்கிட்டான். போலீசை வச்சு ஊரை மிரட்ட வச்சான்."

"ஒங்க அய்யா ஏழாயிரம் ரூபாய் கலாவதியோட பிழைப்புக்குன்னு வாங்கிட்டு, பக்கத்து வயல வாங்கிட்டார். கலாவதி, குடிக்கக் கஞ்சி இல்லாமல், பைத்தியமாய் (பைத்தியம் மாதிரியில்ல... பைத்தியமாயே ) திரியுறாள். அதே சமயம், இந்த அக்ரமங்களைச் செய்த முத்துலிங்கமும், அவனோட கையாட்கள் பேச்சிமுத்து, எல்லாரும், சாராயமும் கோழியுமாய், சிரிப்பும் கும்மாளமுமாய் ஊர்ல கூத்தடிக்காங்க. ஒருவேளை நீ ஏதாவது வம்பு பண்ணுவியோன்னு பயப்படுறாங்க. அதனால தான் ஒங்க அண்ணனுக்கு விஜயாவை அவசர அவசரமாய் கொடுக்குறாங்க. ஆனாலும் ஒன்கிட்ட பயம்."

"தாமோதரனை வச்சு ஒன்னை சரிக்கட்டப்போறதாய்... அதாவது அவன் மெட்ராஸ் வந்து.... உள்ளத்தால மயக்குன ஒன்னை, உடம்பாலயும் மயக்கப் போறதாய் ஒரு பேச்சு அடிபடுது. ஒன்னோட கல்யாணம் ஒன் சொந்த விவகாரம். ஆனாலும் ஒன்று சொல்லியாகணும். அதுல, மாடக் கண்ணோட இழவு விவகாரத்தை மறக்கப் போறியா, இல்ல மறுபடியும் எடுக்கப் போறியா? நீ எப்படிப்பட்டவள்னு இனிமேல்தான் எனக்குத் தெரியணும். என்ன செய்வியோ, ஏது செய்வியோ, கலாவதிக்கு ஒரு