பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

267



“ஓ சாரி. அவன் எனக்கு மட்டுந்தான் பிறத்தியான் என்பதை மறந்துட்டேன். சரி... வா... அறைக்குப் போவோம்.”

தமிழரசி, மீண்டும் டெலிபோனைச் சுழற்றினாள். மணியடிக்க மறுக்கவில்லை. வெறுப்போடு ரிஸீவரை வைத்து விட்டு பத்மாவுடன் படியேறினாள். அறைக்கு வந்ததும் தனது தனிக்கட்டிலில் படுக்காமல், பத்மாவுடன் சேர்ந்து படுத்தாள். “பத்மா, என் கையை பிடிச்சுக் கோடி” என்று பதறியடித்துச் சொன்னாள். பத்மா அவளே அணைத்துக் கொண்டாள். “டீ பத்து... நீ சொல்றது. மாதிரி எவனே ஒரு அயோக்கியனேட வேலையாய்த்தான் இருக்கும். இல்லியா?” என்றாள். பத்மா, “ஆமாடி... பேசாமல் படுடி... நான் அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கேன்” என்றாள்.

பத்மா, எப்படியோ தூங்கிப் போனாள். தமிழரசி, அவள் பிடியை விலக்கி மல்லாந்து படுத்தாள் கண்கள் திறந்து கிடந்தன. மனம் மூடிக்கிடந்தது. பத்மாவை எழுப்பி, மீண்டும் அவள் வாயால் “அப்படில்லாம் நடந்திருக்காது” என்று கேட்கப் போனாள், ஏனோ எழும்பவில்லை. ரேடியத்தில் மின்னிய, அவளது கைக் கடிகாரத்தையே உற்றுப் பார்த்தாள். வினாடிகள் அவளுக்கு நிமிடக் கணக்கிலும் நிமிடங்கள் மணிக்கணக்கிலும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. “கடவுளே... அடேய் .. கடவுளே... இந்த லட்டரில் வந்ததெல்லாம் பொய்யாக இருக்கணும். என் சித்தப்பா உயிரோடு இருக்கணும். என் தங்கை நான் பார்த்தது போலவே இருக்கணும்!”

கடிகார முள்போல், விழியுருட்டி, தமிழரசி புரண்டு. புரண்டு படுத்தாள். எழுந்து உட்கார்ந்தாள். நின்றபடி சுவரில் சாய்ந்தாள். அப்படியே தரையில் விழுந்தாள். கடிகாரம் மூன்று முறை கூவியதும், எழுந்தாள். ஒருவேளை செகண்ட்ஷோ சினிமாவிற்குப் போய் விட்டு ராஜகோபால் வந்திருக்கலாம் என்று நினைத்து, படியிறங்கினாள். டெலி-