பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

நெருப்புத் தடயங்கள்


“நீங்க மனுஷனா? இல்ல...இல்ல...மிருகம், மிருகத்துலயும் கேடுகெட்ட மிருகம். சீ! ஏய்யா என் வாழ்க்கையில குறுக்கிட்டே? கடவுளே...கடவுளே!”

கூப்பிட்டும் வராத கோபத்தில், அதிலும் இரவு லேட்டாக வந்தும், டெலிபோன் பூட்டை உடைத்தும் ‘டிஸ்ஸிபிளினை’ மீறிய தமிழரசியை, நேரடியாகத் திட்டுவதற்காக ஓடிவந்த வார்டனம்மா, அவள், ஒரு இளைஞனிடம் பல்லைக் கடித்துப் பேசுவதையும் அவன் தலை கவிழ்ந்தல்ல – அதை இழந்தவன் போல் நிற்பதையும் பார்த்து விட்டுக் கோபத்தை அதே விகிதாச்சாரத்தில் அனுதாபபாக மாற்றிக்கொண்டாள். பரிதாபமாக நோக்கியபடி பறிகொடுத்தவன் போல் கண் செருக, அதற்கு விழியால் சமாதி கட்டி, வேர்த்து விறுவிறுத்து நின்ற தாமோதரனை நோக்கி தமிழரசி, சில சொல்லம்புகளை எய்யப்போனாள்.

அதற்குள் வார்டன், தமிழரசியின் தோளில் கை போட்டு, தன்னேடு சேர்த்து இழுத்தபடி நடந்தாள். நிலைமையின் நிலை புரியவில்லையானலும், அதன் வேகத்தைப் புரிந்து அதைக் குறைக்க நினைத்தவள் போல், தாமோதரனைப் பார்த்து “பீ ஹியர்...ஷி வில் கம்” என்று சொல்லிவிட்டு, தமிழரசியிடம் “பீகாம்...பீகாம்” என்று அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, தன் அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

வார்டன் அம்மாவிடம், ஐந்து நிமிட நேரம் அழுது விட்டு, அதற்குப் பிறகு நடந்ததைச் சொல்லிவிட்டு, நான்கு பேர் பரிகசிக்கும்படி நடந்துகொள்ளப் போவதில்லை என்று அந்த அம்மாவிடம் வாக்குக் கொடுத்து விட்டு பதினைந்து நிமிட நேரம் கழித்து, தமிழரசி எழுந்தாள்.

அவளுடன் எழுந்த வார்டன், பிறகு இருக்கையில் அமர்ந்தபடி, “நீ இண்டலிஜெண்ட் கேர்ல். அந்தப் பையனும் என் அனுபவத்தில் பார்க்கும்போது கெட்ட-