பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

15

மச்சான் வீட்ல வேலக்காரனாய் நிக்குற. ஒன் எசமான் பிள்ள இன்ஸ்பெக்டரா இருந்தால், சும்மா கிடக் கிறவனை தூக்கிட்டு வரச் சொல்லுதா?’”

“சும்மா இருந்தவன தூக்கிட்டு வாரதுக்கு ஒம்மை மாதிரி நான் கள்ளச்சாராயமா குடிக்கேன்? சத்தியமாய் சொல்லு... அவன் சொல்லுத... ஒம் எருமைக் காதுல விழல?”

“சத்தியமா சொல்றேண்டா... எனக்கு கேட்கல... சீட்டு விளையாட்ல...அதுவும் ரம்மில உட்கார்ந்திட்டால் உலகமே தெரியாது. தூக்குறதே தூக்குறே...அவன் சும்மா இருக்கும்போது தூக்கணும். சீட்டாட்டத்துல ஒரு கை குறையும்படியாய் ஏண்டா தூக்குறே? இதவை தான் ஒப்பன் பைத்தியாரத் தருமராய் இருக்காரு. நீ வீமன் மாதிரி உடம்பை வச்சுக்கிட்டு, வெங்கனுலயும் வெங்கன் வேலக்கார வெங்களுய் இருக்கே.”

“கில்லாடி மாமா நான் இப்பதான் மெட்ராஸ்ல இருந்து வந்திருக்கேன். வயிறு பசிக்குது. அவன் என்ன சொன்னுன்னு வினைதீர்த்தானை சொல்லவிடும்.”

வினைதீர்த்தானுக்கும், கில்லாடிக்குப் பதிலுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று ஆசை.

“ஏய்யா செவிட்டு முண்டம்...இருக்கிற சொத்தை யெல்லாம் புளியம் தோப்புல, கள்ளச்சாராயத்துல கலைக்கிற மூதேவி...இந்த மண்டையன் எனக்கு ஒரே ஒரு ஆசை இந்த தமிழரசியை... ஒரு நாள்... ஒரு பொழுதாவது’...”

வினைதீர்த்தானல் மேற்கொண்டு பேச முடியவில்லை. இனிமேல் அடி விழாது என்பது போல், முதுகை நெளித்து விட்ட மண்டையன் முதுகில், இரண்டு குத்து குத்தினான். தமிழரசி, சித்தப்பா மகனைப் பிடித்துக் கொண்டாள். தந்தை, மண்டையனே நோக்கி நகர்ந்தார். திடீரென்று,