பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

287


“இந்த ஊர்ல படித்தவங்களிலேயே, நீ ஒருத்திதான் ஆம்பிளைம்மா. நீ எப்படிப்பட்டவள்னு நல்லா புரிஞ்சுக் கிட்டேம்மா. ஒன் சின்னய்யாவையும் கொலை செய்துட்டு, இவளேயும் இந்தப் பாடு படுத்துன பயலுவளை சும்மா விடப் படாது இதை விட்டால், நாளைக்கு என் பொண்ணுக்கே இந்த நிலைமை வரத்தான் செய்யும். குற்றாலத்துக்கு கலெக்டர் வந்திருக்காராம். ஜமாபந்தியோ, சாப்பாட்டுப் பந்தியோ நடக்குதாம். நாம் எல்லாரும் ஒன்று திரண்டு போய் அவருக்கிட்ட முறையிடலாம். ஏதாவது செய்துட்டு பலன் இல்லாட்டால் பரவாயில்ல. பலன் இருக்காதுன்னு எதையுமே செய்யாமே இருக்கது தப்பு பாரு. என்னம்மா சொல்ற?”

தமிழரசி, சேலையை இறுக்கிக் கட்டினாள். கன்னத்தில் வழிந்த கண்ணீரைச் சுண்டி விட்டாள். எதிர் வீட்டில்தனது சொந்த வீட்டில் – அம்மா அவளே ஜன்னல் வழியாகப் பார்ப்பது தெரிந்தது. தமிழரசியை, வாரியணைக்கப் போவதுபோல், அவள் கைகளை வளைய வளைய வலிப்பது தெரிந்தது. அம்மாவின் முகம் போனதும், விஜயாவின் முகம், அப்புறம் அண்ணன் ராஜ துரை முகம்; மீண்டும் அம்மாவின் கலங்கிய முகம்... கண்ணீர் முகம்... ஒவ்வொருவரும், அந்த சின்ன ஜன்னலில் தன்னை முறை வைத்துப் பார்ப்பதைப் பார்த்தாள்... அப்பா முகம் தெரியவில்லை. ஒரு வேளை, அவர்தான் ‘தமிழ் எப்படி இருக்கான்னு பாருங்க’ என்று பார்க்கச் சொல்லியிருக்கலாம்... அம்மா பார்க்கிருள்... என் அம்மா...

தமிழரசிக்கு அடிவயிற்றில், மெல்லியதாய் ஒரு உணர்வு உருவாகி, இதயத்தை விட பெரிதாய் வளர்ந்து, தொண்டையையே ராக்கெட்டாக்கி, வாய் வரை வந்து ‘அம்மா’ என்று சொல்லப் போனது. அவள் அதை அடக்கிக் கொண்டாள். கண்ணீரைச் சுண்டிவிட்டதுபோல், பாசத்தையும் சுண்டி விட்டாள். இதுவும் ஒரு வகையில்