பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

நெருப்புத் தடயங்கள்

பார்தப் போர். அது மன்னர்கள் மக்களை வைத்து நடத்திய போர். இது அதிகாரத்தை அறிந்து வைத்திருக்கும் பதவி மன்னர்களுக்கும், தாங்கள்தான் இந்நாட்டு மன்னர்... போகட்டும்... மக்கள் என்று கூட அறியாதவர் களுக்கும் இடையே நடக்கும் போர்.

தமிழரசி, தன்னையே பார்த்த கூட்டத்தைப் பார்த்துப் பேசினாள்.

“குற்றாலத்துக்குப் போவோம். கலெக்டர் கிட்டேயே நியாயம் கேட்போம். இந்த மாதிரி எந்த வீட்லயும் நடக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க எல்லோரும் வரலாம். வினைதீர்த்தான், கலாவதியோட கையைப் பிடிச்சுக்கோ.”

தமிழரசி முன்னல் நடக்க, முத்துமாரிப் பாட்டியும், பொன்மணியும் தோளுக்கொருவராய் அவளைப் பிடித்த படி நடக்க, அடக்கிய உணர்வுகளுக்கு வடிகால் தேடுவது போல் அத்தனை ஏழைகளும், பின்னல் நடந்தார்கள்.

ஒரு சிலர் “என்னய்யா... கலெக்டர்...அவரு மட்டும் என்னத்த கிழிப்பாரு? முத்துலிங்கம் வீட்டை இடிச்சு நொறுக்காம அன்ன நடை போடுறீயளாக்கும்” என்று பொது வழியில், கிளை வழியை அமைக்கப் போனார்கள். உடனே கில்லாடியார் ஏல... மூள கெட்டப் பயலு வளா! கூட்டம் தீப்பிடிக்காத மூங்கில் காடு மாதி. எசகு பிசகான ஒரு வார்த்தையை விட்டுட்டால் கூட போதும், காட்டுத் தீ மாதிரி பிடிச்சுடும். பொறுப்போட. வாங்கடா” என்றார்.

அந்த ஊரில் அம்மன் கொடைகளில் கூட கூடாத, கூட்டம்; சாமியாடிகளுக்குக் கூட வராத துள்ளல்; அனைவரும் அடியடியாய், எதையோ அடிக்கப் போவதுபோல் நடந்தார்கள்.