பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

289


தர்மகர்த்தா உட்பட, அந்த ஊர் பெரிய மனிதர்கள் கூட்டம் தங்களையும் உதைத்துவிடக் கூடாதே என்று உள்ளுறப் பயந்து, “அவன்... முத்துலிங்கப்பயல் ஆடுன ஆட்டம், கடவுளுக்கே தாங்காது” என்றார்கள். தமிழரசியைப் பார்த்து, சிநேகிதப் புன்னகையை, முகத்தில் பவுடர் பூசுவதுபோல் பூசிக் கொண்டார்கள்.

கூட்டம் ஊரின் பிரதான வீதியில் – தேநீர்க்கடைகள் மலிந்த தெரு வழியாக நடந்தது. ஒரு கடையில் உட்கார்ந்து வம்பு பேசிக்கொண்டிருந்த முத்துலிங்கத்தின் கையாட்களான தோட்டத்துப் பஞ்சபாண்டவர்கள், பெஞ்சுகளுக்குக் கீழேயும் மிருகங்களாய் – அற்பப் பூனைகளாய் – பதுங்கிக் கொண்டார்கள். தேநீர்க் கடைக்காரன், அவர்களால் தனக்கும் கடைக்கும் ஆபத்து வந்து விடக் கூடாதே என்று அஞ்சினான். அவர்களே காட்டிக் கொடுக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. இறுதியில் தற்செயலாய் கடையை மூடுவதுபோல் அவர்களை உள்ளே வைத்தே வெளியே பலகைகளைச் சாத்தினான், பின்னர் கூட்டத்தின் ஆவேசத்தால் உந்தப்பட்டு அவனும் கூட்டத்தில் கூடிக்கொண்டான்.

கூட்டத்தினர் எட்டி நடந்தார்கள். எதிரே கிடந்த பொருட்களை எத்தியபடியே நடந்தார்கள். மாடக் கண்ணுவின் சமாதியருகே போனபோது கலாவதி, அந்த மண் புதையலேயே பார்த்தபடியும் தன் கையைப் பிடித்து நடந்த அண்ணனே நோக்கியபடியும் “எய்யோ...எய்யோ’ என்றாள். எவரோ ஒருவர் “இதுதான் மாடக்கண்ணு மாமா சமாதி” என்றார். தமிழரசியும், வினைதீர்த்தானும் போட்டி போட்டு ஓடுவதுபோல் ஓடிஆர்கள். வினைதீர்த்தான் அந்த மண்குழியில் பொத்தென்று விழுந்தான். எய்யோ! என்னைப் பெத்த அய்யாவே! என்ன விட்டுட்டு எங்கேய்யா போயிட்டீரு? நான் ஒம்மை விட்டுட்டுப் போயிட்டேமுன்னு என்ன விட்டுட்டு எங்கேய்யா போயிட்டீரு? இதோ பாருமய்யா, ஒம்ம

நெ. — 19