பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

295

சப்இன்ஸ்பெக்டரும், செய்வதறியாது திகைக்கிறார்கள். துப்பாக்கிகள் ஆடாமல் கிடக்கின்றன. கூட்டம் மீண்டும் சூழ்கிறது.

தமிழரசியோ, கலாவதியின் சடலத்தை தோளில் போட்டபடி ஆயிரம் கால்கள் கொண்ட ஆதிபரா சக்தியாய் அங்குமிங்கும் நடமாடுகிறாள். ஆயிரம் வாய் கொண்ட அபூர்வ சிந்தாமணியாய் கத்துகிறாள், பதைக்கிறாள்.

“சுடுங்கடா... சுட்டுப் பாருங்கடா...”

துப்பாக்கி ரவைகள் துளைத்தெடுக்கும் என்ற எச்சரிக்கை உணர்வோடு பலரும், என்ன ஆனாலும் சரி இனிப் பொறுப்பதில்லை என்று உள்ளத்தால் வேகப்பட்டு, உடம்பால் யந்திரப் பட்ட ஒருசிலரும், விலகியும், நெருக்கமாயும் நின்றபடி, சரமாரியாகக் கற்களை வீசுகிறார்கள். ஈன முனங்கலாய் முனங்கி, கைகால்களை அறுபட்ட ஆடு போல் உதறிவிட்டு ஓய்ந்துபோன இரண்டு சடலங்களை கூட்டம் சூழ்கிறது. ரத்தம், கட்டி கட்டியாய் உறைந்து கிடக்கிறது. பீறிட்ட ரத்தத் துளிகள் நியாயம் தேடிகளின் கண்களிலும், வாய்களிலும் செம்புள்ளிகளாய் தோற்றம் காட்டுகின்றன. போலீஸாரை ஏசிய தமிழரசி, கலாவதியை கீழே வைத்துவிட்டு, இன்னொரு சடலத்தை இழுத்தபடி, காவல் படியில் கால் வைக்கிறாள். இதற்குள் கார்கள் வந்து நிற்கின்றன. அதிகாரிகள், அவற்றிலிருந்து குதிக்கிறார்கள் அவர்களுள் ஒருவர், தலைக்குமேல் கையெடுத்துக் கும்பிடுகிறார். தமிழரசி, இன்னும் “சுடுங்கடா! ஏண்டா ஓஞ்சிட்டிங்க. சுடுங்கடா” என்று கத்தியபடியே படிகளில் ஏறுகிறாள்.

குட்டாம்பட்டியில் நடந்த கொலையும், ஒரு அப்பாவிப் பெண்ணிற்கு சூடுபோடப்பட்ட சமூக விவகாரமும், இனி மேல் செய்தியாகாமல் இருக்கமுடியாது. அந்தச் செய்தி, செய்தியாளருக்கும் - காவல் நிலையத்திற்கும் இடையே