பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

45

மணப்பெண் அறைக்குள் மெள்ள மெள்ள நுழைந்த தமிழரசி, தாமோதரன் உருவம் கண்ணில் முழுமையாகப் படும் இடத்தை, புகைப்படக்காரர் காமிராவை அட் ஜெஸ்ட் செய்வது போல், நின்று, சென்று, கண்களை உயர்த்தி-தாழ்த்தி, கால்களை முன்னாலும் பின்னாலும் நகர்த்தி, மைய இடத்தைப் பிடிக்கும் போதெல்லாம், தாமோதரன், தன் பங்குக்கும் அட்ஜெஸ்ட் செய்ய: நினைத்து, இருக்கையில் இருந்து அங்குமிங்குமாக தன்னைத் தானே நகர்த்திக் கொண்டான். போட்டோ பிடிக்க வந்தவர்கள் அசைந்தால், புகைப்படக்காரருக்கு எப்படிக் கோபம் வருமோ, அப்படிப்பட்ட கோபம் தமிழரசிக்கும். வந்தது. எப்படியோ, அவள் கண்ணுக்கு இவனும், இவன் கண்ணுக்கு அவளும் கிடைத்து விட்டார்கள்.

மணப்பெண் நாணத்தால் முகம் கவிழ்ந்து, உடம்பைக் கோணியபடி காணப்பட்டாள். வெள்ளை ரோஜாவில், இரண்டு பெரிய விழிகளைப் போட்டது போன்ற முகக்காரி; பாக்குச் செடி போன்ற பளபளப்பு மேனிக்காரி, அப்போது மட்டும், அவள் கோரியிருந்த பாங்கை, நமது பத்திரிகைக்காரர்கள் பார்த்திருந்தால், அதையே தேவையான 'போஸாக' நினைத்து அட்டைப் படத்தில் போட அலை மோதியிருப்பார்கள். விஜயாவை, பெண்கள் கூட்டம். மொய்த்தது.

தமிழரசி தாம்பாளத்தோடு கொண்டு வந்திருந்த நிச்சய தாம்பூலப் புடவையை விஜயாவிடம் நீட்டினள். விஜயா, அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, மீண்டும் தலையை கீழே போட்டாள். கொடுத்த புடவையை வாங்காமல், உடுத்த புடவையின் முந்தானையை தூக்கி, கையோடு சேர்த்து முகத்தை மறைத்துக் கொண்டாள். உடனே தமிழரசி "என்னடி நீ...நாம எட்டாவது வரைக்கும் கிளாஸ் மேட். அப்பவே நீ எங்க அண்ணனை கண் போட்டே. எத்தன தடவ என் கிட்டயே அவனைப் பத்திக்