பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

47

முத்துமாரிப் பாட்டி வாய் குலுங்கச் சிரித்தபடியே "என்ன சொன்னால் ஒன்னை வழிக்குக் கொண்டுவர முடியுமுன்னு எனக்கா தெரியாது” என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் பார்த்தாள். மங்கள காரியத்திற்காக, பாட்டி அமங்கலமாகப் பேசியதைப் புரியாதவர்கள்போல் பெண்கள், பாட்டியைப் பார்த்தார்கள்.

வெளியே, விசாலமான தளத்தில் கூடியிருந்தவர்கள், வாழை இலை மேல் வைக்கப்பட்ட கேசரியையும், வெண் பொங்கலையும் சுவைத்தபோது, தமிழரசியன் பங்காளி அண்ணன் ஒருவன் ஒங்களுக்கெல்லாம் கேசரி போடணு முன்னு ஏன்வே ஆசை? அதை முன்னப்பின்ன சாப்பிட்டிருந்தால் போடலாம். இல்லன்னா பார்த்திருந்தாவது செய்யணும், ஒங்களுக்குத் தெரிஞ்சதைப் போடாம, தெரியாததை ஏன்வே போடுறிய?’ என்றான்.

உடனே பெண் வீட்டு பங்காளி ஒருவன் "ஒம்ம மாதிரி ஆட்கள் வாரது தெரியாது. இல்லன்னா புண்ணாக்கு போட்டிருப்போம்..." என்றான்,

தாமோதரன், தன் அருகே உட்கார்ந்திருந்த சித்தப்பா மகன் ஒருவன் காதில் எதையோ பேசினான். உடனே அவன் வாய் விரித்தான்.

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ... ரொம்பத்தான் துள்றாங்க... துள்ளாதிங்க...நாங்களும் ஒங்க வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரர்களாய் வரத்தான் போறோம். அப்போ கவனிச்சுக்கிறோம்.’’

தாமோதரன் நடவடிக்கைகளை உளவு பார்த்துக் கொண்டிருந்த தமிழரசி, “தாமுவை' நாணங் கலந்து பார்த்தாள். அவன், அக்கம் பக்கத்து ஆசாமிகளை முறைத்துவிட்டு, பிறகு அவளைப் பார்த்துச் சிரித்தான். மீண்டும் கூட்டத்தைக் கண்ணால் நோட்டம் விட்டபடியே, வலது கையைத் தலையில் சாய்த்தபடி, விரல்களை