பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

நெருப்புத் தடயங்கள்

உஷாராய் இருந்திருந்தால் இதைத் தடுத்திருக்கலாம். அவங்க ஒடிப்போனதுக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன். எந்தச் சூழ்நிலயிலயும் நீங்க...என்னை...”

‘அடடே... நீ ஏன் அழுகுறே? நான் ஒன்கிட்ட இருந்து விலகிடுவேன்னு ஒனக்கு அந்தமாதிரி எண்ணமே வந்திருக்கப்படாது. இன்னும் உண்மையைச் சொல்லப் போனால், ஒடிப் போனவள் வீட்ல சம்பந்தம் வேண்டாமுன்னு...ஒன் வீட்ல... ஒன் மனசை மாற்றிடப்படாதேன்னு எனக்குப் பயமாய் இருக்கு. என் தங்கை ஒடிப்போன சமயத்துல, எனக்கு இந்த மாதிரி எண்ணம் வரப்படாது. ஆனால் வருதே...!’’

தமிழரசி, கலங்கிய அவன் கண்களைக் கலக்கத்தோடு பார்த்தாள். பிறகு மெல்லிய-நையப் புடைக்கப்பட்ட குரலில், “அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். விஜயாவோட கல்யாணமும் நடந்தே தீரும். ஒரு விஷயம். இந்தக் காலத்துல, இந்த வீட்ல இருந்து இவள் ஓடிட்டாளாம் என்கிறதை யாருமே பெரிசா எடுத்துக்கிறதில்ல. அப்படி இருந்தும் அந்த அபவாதத்துக்கு பயப்படுற நீங்க, கொலைகார குடும்பமுன்னு ஒரு பட்டம் வாங்கணுமா? நல்லா யோசித்துப் பாருங்க... ஒங்க அண்ணன்கிட்டேயும் சொல்லுங்க...”

“நான் யோசிக்காமல் இல்லை. எப்படியாவது அவளை வினை தீர்த்தான் கிட்டே இருந்து பிரிச்சு, ராவோடு ராவாக நாகர்கோவில் மாப்பிள்ளைக்கு கட்டி வச்சுடலாமான்னு கூட நினைச்சேன். ஆனால் அது அயோக்கியத்தனம். நான் சொல்றதை வேதவாக்காய் நினைக்கிற அந்த வாத்தியார் மாப்பிள்ளைக்கு நான் துரோகம் செய்யப்போறதில்லை.”

"ஒங்க அண்ணன் கிட்ட..."

"எப்படி தமிழு சொல்ல முடியும்? எனக்கே அந்தத் தேவடியாமவனை ஸாரி... எனக்கே வினைதீர்த்தானை