பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

நெருப்புத் தடயங்கள்

“நான் மட்டும் வீட்டோட இருந்திருந்தால் ஆரம்பத்துலயே சுண்டுபிடிச்சு, முளையிலேயே கிள்ளியிருப்பேன். ஒனக்குப் பட்டந்தான் முரடன்னு... ஒரு பச்சைக்குழந்தை மாதிரியே இருந்திட்டே...’

‘சரிதாம்பா...என் மேல தப்புத்தான். அதுக்காகத் தான் இப்போ துடிக்கேன். மொதல்ல வண்டில ஏறு: போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாம்.’’

ராணுவ தளபதிபோல் கம்பீரமாகவும், களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாய் துடிக்கும் வீரன் போலவும் அரற்றிய முத்துலிங்கத்தையே, தமிழரசி பயத்தோடும், பரிதாபத்தோடும் பார்த்த போது, தாமோதரன் வண்டியில் ஏறினன். தமிழரசி வேண்டாம்... வேண்டாம்’ என்பதுபோல், முரட்டுக் குரலோடு துடித்த மோட்டார் பைக் வண்டிக்கு, முன்னுலும் பின்னலுமாகப் போனள். போகிறவர்கள் எப்படி வரப் போகிறார்களோ? வருவார்களோ, வழியிலேயே கைதாகிறார்களோ? வினைதீர்த்தான் என்ன ஆகப்போகிறானோ?

தமிழரசி கண்களால் கெஞ்சி, கால்களால் மண் கிளறி, கைகளால் முட்டி மோதியபோது, மோட்டார்பைக், ஏவு கணேபோல் பாய்ந்தது. பின்னால் உட்கார்ந்திருந்த தாமோதரன், சற்று தொலைவில், கள்ள ச்சாராயத்தைக் குடித்துக்கொண்டோ அல்லது காய்ச்சிக்கொண்டோ இருந்த உள்ளூர் கும்பலைப் பார்த்துவிட்டு, பிறகு தமிழரசிக்கு அவர்களை கண்களால் சுட்டிக்காட்டிவிட்டு, அவளை வீட்டுக்குப் போகும்படி கைகளால் சைகை செய்தான்.

தனித்து விடப்பட்ட தமிழரசி, அங்கேயே சிறிது நேரம் நின்றாள். கண்ணசைத்து காதல் செய்யத் துவங்கிய கண்ணிமைக்கும் நேரத்திற்குள், என்னவெல்லாமோ நடந்துவிட்ட ஆற்றாமையில், நின்று நின்று நடந்தாள். ஆகாயத்தில் வெள்ளை ஆந்தை ஒன்றை,