பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

நெருப்புத் தடயங்கள்

அவன் அப்டி கடத்தியிருக்கப்படாது’ என்றவர்கள், "எல்லார் தலையிலயும் மண்ண அள்ளிப் போட்டுட்டு ரெண்டுபேரும் கம்பி நீட்டிட்டாவ பாரு" என்று பொதுப் படையாகப் பேசியவர்கள்- இவர்கள் அனைவரையும் ஒரே நோக்காய் நோக்கியபடியே தமிழரசி வீட்டுக்குள் வந்தாள்.

அன்னை பகவதி மகளிடம், 'ஒனக்கு விஷயம் தெரியுமா என்று கேட்கப் போனாள். தமிழரசியின் முகம் போன போக்கை வைத்தே, அவளுக்கும் விஷயம் தெரிந்து விட்டது என்பதை யூகித்துக் கொண்ட பகவதியம்மா, வராண்டாவில் அமர்ந்து, சுவரில் தலையை வைத்துத் தேய்த்தபடி, முகத்தைக் கைகளால் துடைத்தபடி தோன்றிய மகனைப் பார்த்தாள். தமிழரசி, அம்மாவிடம் "அப்பாவை எங்கேம்மா...’’ என்றாள். -

ராஜதுரை தங்கைக்குப் பதிலளித்தான்.

“அவரு, தாமோதரன் அப்பாவோட போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருக்காரு. நம்ம வீட்ல கல்யாணம் கூடப்போற சமயத்துல, வினைதீர்த்தான் இப்டிப் பண்ணிட்டதுல அப்பாவுக்கு சொல்ல முடியாத கோபம். அவனை ரெண்டுல ஒண்ணு பார்த்துடணுமுன்னு கத்திக் கிட்டே போனாரு. பொண்ணப் பறிகொடுத்தவங்களுக்கு நாமும் கூடமாட ஒத்தாசை செய்யனும் பாரு. செறுக்கி மவனை ஒரே வெட்டாய் வெட்டணும்.”

தமிழரசி, அண்ணனின் முகத்தில், வேதனையும், வேகமும் ஒன்றை ஒன்று விடாமல் வட்டமடிப்பதைப் பார்த்தாள். அவன் போக்கிற்கும் தனக்குள்ளேயே நியாயம் சொல்லிக்கொண்டாள். கல்யாண மாப்பிள்ளை வேடத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளப் போகிற சமயத்தில், வேடம் கலையுமோ என்ற பயம். அது, சித்தப்பா மகனையும், செறுக்கிமவன் என்று பேசவைக்