பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

65

வந்தோம். எங்கப்பாவ பேச, ஒனக்கு எப்படி அண்ணாச்சி மனசு வந்துது?’’

ராஜதுரை மேலும் கோபப்பட்டு, கூப்பாடு போட்டான் :

“வாம்மா மூளியலங்காரி... மூதேவி சண்டாளி: ஒன்னைப்பற்றி எனக்குல்லா தெரியும். ஒன் அண்ணன் இருக்கிற இடத்தை மட்டும் நீ சொல்லல, முதல் பலி நீ தான். அது அப்புறம். இப்போ ஒப்பன கூட்டிட்டு மரியாதியா போ. ஒன்னத்தான்... வெளில போ நாயே..."

பிரமித்து எழுந்த தமிழரசி, எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்ற அண்ணனைப் பார்த்தாள். தலை கவிழ்ந்து உடல் கவிழ்ந்து நின்ற சித்தப்பாவையும், தன்னையே அடைக்கலம் தேடி நோக்கிய கலாவதியையும் பார்த்தாள். அப்படிப் பார்க்கும்போது அண்ணனின் கை, சித்தப்பாவின் பிடரிக்குப் போவதையும் பார்த்தாள். த மி ழ ர சி அண்ணனின் கையைப் பிடித்தபோது, அவன் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவள் கன்னத்திலேயே ‘பளார்’ என்று அடித்துவிட்டு, அப்புறம் யோசிப்பது போல் கண்களால் கெஞ்சினான். பிறகு எல்லாம் இந்த மூதேவிகளால வந்துது” என்று சொல்லி, மாடக் கண்ணுவின் கழுத்தைப் பிடித்து மீண்டும் தள்ளப் போனான்.

தமிழரசி கன்னத்தைத் தடவியபடியே, போகப் புறப்பட்ட சித்தப்பாவை வழிமறித்தபடியே, அண்ணனுக்கு சவாலிட்டாள்.

"ஒனக்கு இவர் யாரோ? ஆனால் எனக்கு சித்தப்பா. இந்த வீட்ல எனக்கும் சட்டப்படி ஒரு பங்கு உண்டு. நீ அவரை போன்னு சொன்னால், என்னால அவரை ‘வான்னு’ கேட்க முடியும். என்னை துரத்துமுன்னால, என்

நெ - 5