பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

69

"இன்னும் நீ பள்ளிக்கூடத்துலயும், காலேஜிலயும் சொல்லிக் கொடுத்ததுமாதிரியே... உலகம் இருக்குமுன்னு நினைக்கிறே. இவளப்பற்றி ஒனக்கு என்ன தெரியும்? இன்னைக்குக் காலேயிலே இன்னா...கல்லுளிமங்கியா நிக்காளே... இந்த மூதேவி... நம்ம வீட்ல வினைதீர்த்தான் பயலோட கிசுகிசுன்னு பேசிக்கிட்டு இருந்திருக்காள். நம்ம வீட்டுக்கு வெளியே ஜன்னலுக்குப் பின்னால, பொன்மணி நின்னாளாம். நம்ம அம்மாவைப் பார்த்ததும், பேச்சை டக்குன்னு நிறுத்திட்டாளாம். இவள் அண்ணன் ஒருநாளும் இல்லாத வழக்கமாய் எட்டுமுழ வேட்டி கட்டி, சிலாக் சட்டை போட்டு வந்திருக்கான். அப்பவே நம்ம அம்மாவுக்கு சந்தேகம் வந்திருக்கு.’’

கலாவதி தமிழரசியை மருவியபடியே பார்த்து, அவளிடம் மன்றாடப் போனபோது, பகவதியம்மாள் முந்திக் கொண்டாள்.

"ஒனக்கு என்னடி தெரியும்? பள்ளிப் படிப்பு புள்ளிக்கு உதவுமா? பொன்மணியையும், வினைதீர்த்தான் பயலையும் தனியா வீட்டுக்குள்ளே விட்டுட்டு, இந்த சண்டாளி எத்தனை நாள் வெளில காவலுக்கு இருந்திருக்காள்னு கேளு. ஒருநாளா... ரெண்டுநாளா... தினமும் அவங்க ரெண்டுபேரும் வீட்டுக்குள்ள கொஞ்சி குலாவுவாங்க. இவள் காவலுக்கு நிற்பாள். உண்டா இல்லியான்னு அவள் கிட்டேயே கேளு. இது தெரியாமல், நீ என்னடான்ன... கூடப் பிறந்த அண்ணன்கிட்டயே ஜென்ம எதிரிமாதிரி பேசுறே. ஏண்டி பேசாமல் நிக்கிறே...? அண்ணனுக்கு ஒரு அப்பாவிப் பொண்ணக் கூட்டிக் கொடுத்தது நிசமா இல்லியான்னு ஒரு வார்த்தை கேளுடி.”

தமிழரசி அதிர்ந்தாள். அன்று, சென்னையில் இருந்து வந்த நாளில், கிணற்றுப் பக்கம் போய்க் கொண்டிருந்த தன் பின்னல் வந்த இதோ இவளிடம் பொன்மணி வரலையா என்று கேட்டபோது, இவள் 'அவள் வர்ல'