பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

நெருப்புத் தடயங்கள்

ஏதாவது ஆறுதல் சொல்லுவான். அடுத்த குடும்ப விவகாரம் நமக்கு எதுக்குன்னு, நான் வேற பக்கமாய் போயிடுவேன். அந்த நாசமாப் போறவன், இப்படி மோசம் பண்ணுவான்னு எனக்கு எள்ளளவும் தெரியாது. என்னை நம்பு தமிழரசி."

பகவதியம்மாள் மீண்டும் பாய்ந்தாள்:

“ஆமாடி...இந்த மேனாமினுக்கிய நம்புடி. பெத்த அம்மா பேச்சு ஒனக்குப் பெரிசா தெரியாது. இவளையே நம்பு. அடிப்பாவி. எத்தன நாளுடி. எங்க குடியைக் கெடுக்கக் காத்திருந்தே? சொந்த பெரியப்பா வீட்டையாவது கெடுக்காமல் இருப்போமுன்னு ஒனக்குத் தோணல பாரு. என் மகளை என்கிட்ட விட்டுடுடி. என் மவள என் கிட்ட இருந்து பிரிச்சிடாதடி. பாவி. கைகேயி... கூனி... குடி கெடுப்பாள்."

ராஜதுரை, கண்களைத் துடைத்த அம்மாவை அதட்டினான்.

"நீ ஏம்மா அழுவுற? இந்த வீட்ல யாராவது அழனு முன்னால், நான் தான் அழணும். 'இவன் ராஜதுரை, தாமோதரன் வீட்ல கால்வைக்கப் போறான். அதுக்குள்ள, அந்தக் குடும்பம் சந்திக்கு வந்துட்டுன்’னு ஊர்க்காரப் பயலுவடிக்கடையில பேச ஆரம்பிச்சுட்டாங்களாம். இன்னும் என்னென்ன பேசப் போறாங்களோ? ஒன் மகளுக்கே என்னோட மனசு படும்பாடு புரியல. ஊருக்கு எப்டிப் புரியும்...? கடைசில, கூட்டிக் கொடுத்தவள் பெரிசாப் போயிட்டாள். கூடப்பிறந்த அண்ணன் சிறிசாப் போயிட்டான்."

தமிழரசி, தழுதழுத்த குரலில், அழாக்குறையாகப் பேசிய அண்ணனைப் பார்த்தாள். கேவி நின்ற அம்மாவைப் பார்த்தாள். அவர்களைப் பார்க்கப் பார்க்க, அவளையறியாமலே கலாவதிமேல் லேசாக எரிச்சல் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில், கலாவதியும் போட்டி போட்டு அழுத