பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

நெருப்புத் தடயங்கள்

எத்தனை வருஷங்கள் பழகினர்களோ, எப்படிப் பழகினர்களோ?

தூங்காமலே தமிழரசி துவண்டபோது, சேவல் கூவியது, காகங்கள் கத்தின. மைனாக்கள் நச்சரித்தன. அணில்கள் விசிலடித்தன. இவற்றினூடே, சித்தப்பா வீட்டில் ஒலச்சத்தம் கேட்டது. கலாவதி ‘அடிக் காதிங்கய்யா... என்ன வேணும்னாலும் அடிங்க... எங்க அப்பாவை விட்டுடுங்கய்யா... அய்யோ... அம்மா’’ என்று புலம்பும் சத்தம் கேட்டது.

தமிழரசி வெளியே ஓடிவந்தாள். வராண்டாவில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவள் தந்தை ஒரு தினப் பத்திரிகைக்குள், தன்னை மறைத்துக் கொண்டார். அம்மா, முகத்தை ரசனையோடு திருப்பிக் கொண்டாள். ராஜதுரை சம்பந்தம் இல்லாத ஏதோ ஒன்று நடப்பது போல், பல் தேய்த்துக் கொண்டிருந்தான். சித்தப்பா வீட்டிலோ, ஒலச் சத்தம், அவலச் சத்தமாகியது. திடீரென்று முத்துமாரிப் பாட்டியின் சத்தம் ஓங்கி ஒலித்தது. -

"போலீஸ் எசமான் மாரே... ஒரு பொம்புளய இப்டிய்யா அடிக்கது? அதுவும் ஜாக்கெட்ட பிடிச்சு இழுத்து...”

8

போலிசாரை ‘அடித்துப்' பேசிய முத்துமாரிப் பாட்டி, பேச்சற்றுப் போனது போல், அவள் குரல் தமிழரசிக்குக் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, சவுக்குத் தோப்பில் வீசும் காற்றின் ஓசைபோல, வீச்வீச்” என்ற கேட்டது. 'திருட்டுச் செறுக்கி...’ என்ற ஆண்குரல்