பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

நெருப்புத் தடயங்கள்

யோட பிறந்தியா, இல்ல தனியாய் பிறந்தியா? அவங்க அடிபட்ட வேதனையில நான் துடிச்சால், என்னையே நான் ஏதோ தமிழ்நாட்டு போலீசிற்கு எதிராய் செயல்படுறது மாதிரி பேசறியே. இன்னும் இருபத்து நாலு மணி நேரத்துல, ஒன் காக்கி யூனிபாரம் கழறுதா இல்லியான்னு பாரு. இந்த ஏரியா டி.ஐ.ஜி. எனக்கு காலேஜ்ல எகனமிக்ஸ் டீச்சராய் இருந்தவர். அவர்கிட்ட நான் நியாயம் கேட்கப்போறேன். கலா, புறப்படும்மா! இந்த கிழிஞ்ச ஜாக்கெட்டோடயே புறப்படு. சித்தப்பா எழுந் திரும். மக்களுக்காக போலீசா? போலீசிற்காக மக்களான்னு டி.ஐ.ஜி. கிட்டேயே கேட்டுடலாம்.”

தமிழரசி தற்செயலாகத் திரும்பிய போது, தந்தையும், அண்ணனும், அம்மாவும், முத்துலிங்கத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தாள். கூட்டத்தின் போலீஸ் எதிர்ப்பு ஒலி, சப்தமாகி, கத்தலாகிக் கொண்டிருந்தது. கூட்டம் தைரியப்பட்டபோது, போலீஸ் அதைரியப்பட்டது. முத்துமாரிப் பாட்டியும் எகிறினாள்.

‘நானும் ஒன்கூட வாரேன் தங்கம். ஆனல் இந்த கொள்ளி முடிவானுவ அடிச்ச அடில, என்னல நடக்க முடியுமோ என்னவோ. உம், புறப்படு...”

திடீரென்று, தமிழரசியின் தந்தை அருணாசலம், மகளை நோக்கிப் பாய்ந்தார். “ஒன்ன இதுக்காளா படிக்க வச்சேன். நாலு பேரு முன்னால இப்டி ஏடாகோடமாய் பேசுறதுக்கா படிக்க வச்சேன்" என்று கையை முஷ்டிகளாக்கி ஓடியவரை, ஒரு போலீஸ்காரர் பிடித்துக் கொண்டே பெரியவரே, அவங்க ஒங்க மகளாய் இருக்கலாம். ஆனல் அவங்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது எங்க டூட்டி’ என்று எச்சரித்தார். சகாக்களைக் கண்ணடித்தார்.