பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

நெருப்புத் தடயங்கள்

ஒவ்வொருவரும், ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற யூகத்துடன், தங்களுக்குப் பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்துக் கொண்டார்கள். வேண்டப்பட்டவர்களே தேடிப் பிடித்து, அவர்கள் அருகே நின்று கொண்டார்கள். பாதாதிகேசம் வரை, லத்தித் தடயங்களோடு, சிவப்புச் சாயம் பூசப்பட்டவர் போல் தலைகுனிந்து நின்ற மாடக் கண்ணு, ரத்தக் காயங்களின் எரிச்சல் தாளாமல் அவற்றை ஊதிவிட்டுக் கொண்டிருந்த கலாவதியைப் பார்த்தார். தமிழரசியின் தந்தை ராஜதுரையைப் பார்த்தார். அவன் விஜயாவின் அண்ணன் முத்துலிங்கத்தைப் பார்த்தான். முத்துலிங்கம், அருகே நின்ற சிறுவனிடம் ரகசியமாய்ப் பேசி, அவனை வெளியே அனுப்பி வைத்தார். சிறிய மவுனம். எல்லோரும் இளைப்பாறிய நிசப்தம்.

எவர் எவரெல்லாமோ பேசப் போனபோது, திடீரென்று முத்துலிங்கம் கத்தினார்:

"இதுவரைக்கும் பாலைப் பார்க்கிறதா, பால் காய்ச்ச பானையைப் பார்க்கிறதான்னு நடந்த விஷயத்த முழுசாய் சொல்லல. இப்போ சொல்லப் போறேன். அருணாசலம் மாமா எப்படி நினைச்சாலும் சரிதான். என் அப்பாவி தங்கச்சிய கடத்துனதே இந்த தமிழரசிதான். இந்தப் புண்ணியவதிதான் என்கிட்டேயே ஓங்க பொன்மணிக்கு, நாகர்கோவில் கல்யாணத்துல சம்மதமா'ன்னு கேட்டாள். அடிக்கடி ஒன்றுமே தெரியாத என் அப்பாவி தங்கச்சிகிட்ட கிசுகிசுன்னு பேசி, அவள் மனச கலைச் சிட்டா. பொன்மணியக் கடத்துனதே இந்த அம்மாதான். சப்-இன்ஸ்பெக்டர் சார், இவளை விசாரிக்கிற முறையில விசாரிங்க. என் தங்கச்சி இருக்கிற இடம் தானாய் தெரியும்.’’

தமிழரசி திடுக்கிட்டாள். உதடுகள் துடிக்க நின்ற முத்துலிங்கத்தை, அதிர்ச்சியோடு பார்த்தாள். அவர் .பொய்யாகச் சொல்லியிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டாள். அவரோ, உண்மையென்று நம்பிச் சொல்