பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3

தென்ஆப்பிரிக்காவின் கிராமம் ஒன்றில், 1918 ஜூலை 18 ஆம் நாள் நெல்சன் மண்டேலா பிறந்தார்.

தெம்புலாந்தின் உயர்நிலைக் குழுத்தலைவரின் பிரதான ஆலோசகராக மண்டேலாவின் தந்தை பணியாற்றி வந்தார். அவரது தந்தை இறந்த பின், உயர் குழுத் தலைவர் அவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தன் வாழ்வில் உயர் பதவி வகிக்கும் தகுதி உடையவராவதற்கு மண்டேலாவுக்குப் போதிய பயிற்சி அளிப்பதில் தலைவர் கவனம் செலுத்தினார்.

ஆனால், ஒரு வழக்குரைஞராக வரவேண்டும் என்றே நெல்சன் மண்டேலா தீர்மானித்தார். அதற்குக் காரணம் உண்டு. தலைவரின் சபையில் நாள்தோறும் பலவிதமான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. மக்களின் துன்ப துயரங்களை அவ்வழக்கு விசாரணைகள் மூலம் அவர் புரிந்துகொள்ள முடிந்தது. வாழ்வில் துயரப்படும் அத்தகைய ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அவர் வழக்குரைஞராக விரும்பினார்.

மேலும், தங்கள் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காகவும், தாக்க வந்த எதிரிகளை முறியடிப்பதற்காகவும் அவரது முன்னோர்கள் போர்களில் காட்டிய வீரதீரச் செயல்கள் பற்றிய கதைகளை


வல்லிக்கண்ணன் • 13