பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சக்தி மிக்க ஸ்தல கிளைகளையும் வட்டாரப் பிரிவுகளையும் அமைத்து எப்படிச் செயல்படுத்தலாம் என வழி வகைகளை வகுப்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம். மண்டேலா செம்மையான ஒரு திட்டம் தயாரித்துக் கொடுத்தார். அது அவர் பெயராலேயே ‘எம் பிளான்’ என்று அழைக்கப்பட்டது.

1955இல் மக்கள் காங்கிரஸ் செயல்படுத்திய சுதந்திர சாசனத்தை மக்கள் மத்தியில் பரப்புவதிலும் மண்டேலா விசேஷமான பங்காற்றினார்.

உழைக்கும் மக்களைச் சுரண்டும் போக்கு, ஒவ்வொருவரும் ‘கடவுச் சீட்டு’ (பாஸ்) வைத்திருக்கவேண்டும் என்கிற சட்டம், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பந்துஸ்தான் திட்டம், அனைவருக்கும் பயன்பட வேண்டிய பல்கலைக்கழகங்களைத் தனிமைப்படுத்திப் பிரிக்கிற போக்கு முதலியவற்றை எதிர்த்துப் போராடுவதில் மண்டேலாகவனம் செலுத்தலானார். 1950களின் பிற்பகுதியில் இவை நிகழ்ந்தன.

பந்துஸ்தான் திட்டம் என்பது அரசியல் ரீதியான பகாசுரச் சுரண்டல் என்றும், பொருளாதார ரீதியில் அபத்தமான செயல் முறை எனவும் மண்டேலா தீர்க்கதரிசனமாக முன்கூட்டியே உணர்ந்து சொன்னார். இதன் விளைவாக மக்கள் கூட்டம் கூட்டமாக அவரவர் உறைவிடங்களிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும், அரசியல் கொடுரங்களும் போலீசின் பயங்கர அடக்குமுறைகளும் கட்டவிழ்ந்து விடப்படும் என்றும் அவர் கவலையோடு அறிவித்தார்.

அனைவருக்கும் பொதுவான பல்கலைக்கழகங்களைப் பிரித்துத் தனிமைப்படுத்துவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் மண்டேலா எச்சரித்தார். அனைத்து இன இளைஞர்களும் சேர்ந்து கல்விப்பயிற்சி பெற வகை செய்யும் பொதுப் பல்கலைக் கழகங்கள் சர்வ இனங்களின் ஒற்றுமைக்கும் நட்பு உறவுக்கும் இடமளிக்கின்றன. அவற்றை இனவாரியாகப் பிரித்துத் தனிமைப்படுத்துகிற முறையானது இன ஒதுக்கல் கொள்கையைச் செயல்படுத்தும் போக்கேயாகும். அடிப்படையில் கறுப்பின மாணவர்களுக்கு இடம் அளிக்காது அவர்களை


24 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா