பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்புறப்படுத்தும் செயல்முறையாகவே அது அமையும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

இவற்றால் எல்லாம் மண்டேலா அந்தக் காலகட்டத்தில் பலவகையான அடக்கு முறைகளுக்கும் ஆளாக நேர்ந்தது. அவருக்கு அநேக விதமான தடைகள் விதிக்கப்பட்டன. பலமுறை அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்.

அந்நாட்களில் மாபெரும் தேசத்துரோகச் சதி வழக்கு ஒன்று நடைபெற்றது. அது சம்பந்தமாகக் குற்றம் சாட்டப் பெற்றவர்களில் மண்டேலாவும் ஒருவரானார். இது அவரது வழக்கறிஞர் தொழிலையும், அரசியல் பணியையும் பெரிதும் பாதித்தது. அதனால் அவருக்கு இழப்புகள் அதிகமாயின.

1960 இல் ஷார்ப்வில் படுகொலை என்ற துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அதன் பயனாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் சட்ட விரோதமான அமைப்பு எனத் தடை செய்யப்பட்டது. குற்ற விசாரணை அனுபவித்து வந்த மண்டேலா கடுமையான சிறைத் தண்டனை பெற்றார்.

1961இல் தென்ஆப்பிரிக்கா குடியாட்சி அமைப்பு முறையை ஏற்றுக் கொள்ளும் நிலைமை உருவாகி வந்தது. அதனால் தேசத்துரோகச் சதி வழக்கு செயலிழந்து போக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் சட்ட விரோதமான இயக்கம் எனும் நிலை நீடித்தது. எனவே அதன் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவாறே இயக்க வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள். சிறையிலிருந்து வெளிவந்த மண்டேலா இப் புதிய சூழ்நிலையில் துணிந்து செயலாற்றும் முக்கியமான தலைவராக விளங்கினார்.

1961 மார்ச் மாதம், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தூண்டுதலின் பேரில், அனைத்து ஆப்பிரிக்கர் மாநாடு ஒன்று கூட்டப் பெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்த 1400 பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டார்கள். அம்மாநாட்டில்


வல்லிக்கண்ணன் • 25