பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக்கிய உரையாற்றும் பொறுப்பு மண்டேலாவுக்குக் கிட்டியது. சூடேற்றும் உணர்ச்சிகரமான சொற்பொழிவாக அமைந்திருந்தது அவர் பேச்சு.

அனைத்துத் தென் ஆப்பிரிக்கர்களின் பிரதிநிதிகள் அடங்கிய தேசியப் பெருங்கூட்டம் ஒன்றைக் கூட்டும்படி இன ஒதுக்கல் முறையைக் கடைப்பிடித்து வருகிற அரசுக்கு மண்டேலா அறைகூவல் விடுத்தார். குடியாட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் திட்டத்தை நிர்ணயிப்பது பற்றி அக்கூட்டம் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அரசு அப்படிச் செய்யத் தவறினால், வர இருக்கிற குடியாட்சித்துவக்க விழாவின்போது, அனைத்து ஆப்பிரிக்க மக்களும் பொதுவான மறியலில் ஈடுபட்டுப் போராட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் மண்டேலா எச்சரிக்கை விடுத்தார்.

உடனடியாக அவர் இத் திட்டத்தைச் செயல்படுத்தி வழி நடத்துவதற்கு ஏதுவாகத் தலைமறைவானார். அவரது அறைகூவலுக்கு இணங்கிப் பெரும் அளவில் மக்கள் திரண்டெழுவர் என்று மண்டேலா எதிர்பார்த்தார். அத்தகைய பேராதரவு மறியல் போராட்டத்துக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் நாடு நெடுகிலும் கணிசமான அளவில் மக்களின் ஆதரவு இருந்தது.

அரசே அஞ்சி நடுங்க வேண்டிய சூழல் நாட்டில் நிலவியது. போர்க்கால நடவடிக்கை போல மிகப் பெரிய அளவில் இராணுவ வீரர்களைக் கொண்டு வந்து குவித்தது அரசாங்கம். இந்த விதமான சூழ்நிலையில் குடியாட்சி முறை துவக்கி வைக்கப்பட்டது.

மண்டேலா அமைதியாக ஒரு இடத்தில் வசித்துச் செயல்புரிய முடியாத நிலைமை வளர்ந்தது. அவர் தனது குடும்பத்தினரைப் பிரிந்து வாழ வேண்டியது கட்டாயமாயிற்று. அவரை அரசாங்கத்துக்குக் காட்டிக்கொடுக்கக் கூடியவர்கள் எங்கும் இருந்தார்கள். போலீஸ் உளவாளிகளும் அவரை எப்போதும் தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது கண்களில் படாமல் தப்பி வாழ்வதற்காக மண்டேலா பல்வேறு மாறுவேடங்களில்,


26 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா