பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடம் விட்டு இடம் நகர்ந்து, காலம் கழிக்க வேண்டியதாயிற்று. சிலசமயம் அவர் சாதாரணத் தொழிலாளி மாதிரி உடை அணிந்து திரிந்தார். சில வேளை காரோட்டி போலவும், வேறு விதங்களிலும் வேடம் தரித்துச் செயலாற்றினார்.

இந்தச் சமயத்தில் தான் மண்டேலாவும் தேசியக் காங்கிரசின் இதர தலைவர்களும் சேர்ந்து திட்டமிட்டு, விடுதலைப் போராட்டத்தின் ஒரு விசேஷ அங்கமாக, ஆயுதம் தாங்கிய உறுப்பினர்கள் கொண்ட புதிய அமைப்பைத் துவக்கினார்கள். ஆயுதங்களைப் பயன்படுத்திப் போராட வேண்டிய அவசியம் ஏற்படும்போது விடுதலை இயக்கத்தினர் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ‘தேசத்தின் ஈட்டி’ என்று இப் பிரிவு அழைக்கப் பெற்றது.

தென் ஆப்பிரிக்க நிலைமையை ஆழ்ந்து கவனித்து, நீண்ட கணிப்புகள் செய்ததன் விளைவாக, மண்டேலாவும் அவரது சகாக்கள் சிலரும் இந்த முடிவுக்கு வர வேண்டியது அவசியமாயிற்று. தேசிய காங்கிரசின் அமைதி நிறைந்த கோரிக்கைகளை அரசு வன்முறைகளால் அடக்கி ஒடுக்கிப் புறக்கணித்து வருகிறது. இந்த நிலையில் அமைதி நடவடிக்கைகளையும் அகிம்சை முறைகளையும் தொடர்ந்து உபதேசித்துக் கொண்டிருப்பது தவறான நடவடிக்கையும், யதார்த்த விரோதமான செயல்பாடுகளுமே ஆகும். இந்த நாட்டில் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்வது தவிர்க்க முடியாததுதான். ஏனைய செயல்முறைகள் எல்லாம் தோல்வி அடையும்போது, அமைதி வழி எதிர்ப்புகள் பலவும் பயனற்றுப் போகிற நிலையில், விடுதலை இயக்கத்தினரும் ஆயுதம் தாங்கி வன்முறைச் செயல்களைக் கையாண்டு, அரசியல் போராட்டத்தை முன் நடத்திச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். அரசுதான் எங்களை இந்த நிலைக்கு இட்டுச் சென்றது என்று மண்டேலா விளக்கம் கூறினார்.

1961இல் ‘தேசத்தின் ஈட்டி’ என்ற அமைப்பு துவக்கப்பட்டது. மண்டேலா தான் அதன் தளபதி. 1962இல் அவர் சட்ட


வல்லிக்கண்ணன் • 27