பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்டேலாவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. ராபன் தீவில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

மோசமான ஜெயில் என்று கெட்ட பெயர் வாங்கிய சிறை அது. கேப் டவுண் கடல்கரையிலிருந்து 7 கி.மீ. தூரம் தள்ளியிருந்த சிறு தீவு ஒன்றில் அது அமைக்கப்பட்டிருந்தது. வெகு கடுமையான காவல்களை அச்சிறை பெற்றிருந்தது. அங்குதான் மண்டேலா காவலில் வைக்கப்பட்டார்.

1984இல் ராபன் தீவுச் சிறையிலிருந்து, கேப் டவுணிலிருந்த பால்ஸ்மூர் ஜெயிலுக்கு அவர் மாற்றப்பட்டார். பிறகு 1988 டிசம்பரில், பார்ல் என்ற இடத்துக்கு அருகில் உள்ள விக்டர் வெர்ஸ்டர் சிறைக்குக் கொண்டு போகப்பட்டார். 1990 பிப்ரவரியில் விடுதலை பெறும் வரை மண்டேலா இந்தச் சிறையில் தான் தண்டனை அனுபவித்தார்.

அவர் சிறை இருந்த காலத்தில் எளிதில் விடுதலை பெற்று வெளியேறிவிடலாம் என்று பலமுறை ஆசை வார்த்தைகள் கூறினார்கள் ஜெயில் அதிகாரிகள். அரசின் புதிய பந்துஸ்தான் கொள்கையை அவர் ஏற்றுக் கொண்டால் அவருடைய சிறைத் தண்டனை குறைக்கப்படும் என்று சொன்னார்கள். ட்ரான்ஸ்கீ வட்டாரத்தின் சுதந்திரத்தை ஒப்புக்கொண்டு, அங்கே போய் வசிக்கச் சம்மதித்தால் அவர் விடுதலை அடையலாம் என்றார்கள். அவை அனைத்தையும் மண்டேலா வன்மையாக மறுத்துவிட்டார்.

மீண்டும் 1980களில் அவருக்கு ஆசைத் தூண்டில் முன் வைக்கப்பட்டது. இனி வன்முறைச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று அவர் உறுதியளித்தால், உடனடியாக அவருக்கு விடுதலை கிடைக்கும் என்றார்கள்.

சிறைக்கைதிகள் ஒப்பந்தங்களில் ஈடுபட முடியாது; சுதந்திர மனிதர்கள்தான் ஒப்பந்த வார்த்தைகள் பேச முடியும் என்று மண்டேலா அறிவித்தார்.

1990 பிப்ரவரி 11 ஆம் நாளன்று மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். உடனடியாக அவர் தனது வாழ்க்கைப்


30 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா