பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வில்லை. பேசுகிறவர்களை அச்சுறுத்துவதும் அவர்களுடைய எண்ணமாகும்.

கைதிகளுக்கும் வருகையாளர்களுக்குமிடையே உரையாடல் ஆங்கிலத்தில் அல்லது ஆப்பிரிக்கப் பொது மொழியிலேயே நடைபெற வேண்டும் என்பது விதியாகும்.

ஆப்பிரிக்க இனங்களின் வட்டார மொழிகளில் பேசக்கூடாது. மேலும் குடும்ப விஷயங்களை மட்டும்தான் அவர்கள் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருந்தது.

குடும்ப சமாச்சாரத்தை விட்டு விலகி, அல்லது அரசியல் விஷயத்தைத் தொட்டு, உரையாடல் விதியை மீறிச் சென்றால், சந்திப்புக்கு உடனடியாக முடிவு கட்டப்படும்.

ஒருவர், வார்டர்களுக்குப் புதிதாகத் தோன்றுகிற ஏதேனும் ஒரு பெயரை உச்சரித்தால், உடனேயே காவலர்கள் குறுக்கிடுவார்கள்.

யார் அது, அவருக்கும் கைதிக்கும் என்ன உறவு என்றெல்லாம் விசாரிப்பார்கள். இது அடிக்கடி நிகழும். ஆப்பிரிக்கர்களின் பெயரமைப்புகள் மற்றும் உறவுமுறைகள் பற்றி வார்டர்கள் பொதுவாகப் பரிச்சயம் இல்லாதிருந்ததே இதற்குக் காரணமாகும்.

இப்படி வார்டர்கள் அடிக்கடி தலையிடவும், தங்களது குடும்ப உறவுக் கிளைகள் பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால், அபூர்வமாகக் கிடைக்கிற அரிய சந்திப்பு நேரத்தில் கணிசமான பகுதி வீணாகிறதே என்ற மனவேதனை கைதிகளுக்கு உண்டாவது இயல்பேயாகும்.

ஆனாலும், வார்டர்களின் அறியாமையைக் கைதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது என்று சொல்ல வேண்டும். அவர்கள் யாரைப் பற்றிப் பேச விரும்புகிறார்களோ அவர்களது உண்மைப் பெயரைக் குறிப்பிடாமல் சங்கேதப் பெயர்களைத் தங்களுக்குள் பரிமாறிக்


44 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா